Advertisment

"நிக்கி கல்ராணியப் பாத்து ஆசை வந்துச்சு'' -ஜில்லான ஜீவா!

/idhalgal/cinikkuttu/jelana-jeeva

"நாடோடிகள்', "ஈட்டி', "மிருதன்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனம் குளோபல் இன்போடெய்ன் மென்ட். இந்நிறுவனம் இப்போது தயாரித்துள்ள "கீ' இந்நிறுவனத் தின் 10-ஆவது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி, அணைகா, ஆர்.ஜே. பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, ம

"நாடோடிகள்', "ஈட்டி', "மிருதன்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனம் குளோபல் இன்போடெய்ன் மென்ட். இந்நிறுவனம் இப்போது தயாரித்துள்ள "கீ' இந்நிறுவனத் தின் 10-ஆவது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி, அணைகா, ஆர்.ஜே. பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீராகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

j

கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் காலீஸ். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பு நாகூரன்.

""வருடத்திற்கு ஒரு படம் நடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியைப் பார்த்துதான் பல படங்கள் பண்ணவேண்டும் என எண்ணம் மனதில் ஆசை தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படம் ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்'' என பூரிப்புடன் பேசுகிறார் ஹீரோ ஜீவா.

Advertisment

""நாலஞ்சு வருடங்களாக இந்தப் படத்தை ஒரு குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ள னர். காலீஸ் ஒரு மிகச்சிறந்த இயக்குநர். ஜீவாவுடன் நான் முதலில் நடித்த படம் இது. ஆனால் "கலகலப்பு-2' படம்தான் முதலில் ரிலீஸ் ஆனது. இப்படத் தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். உங்கள் அனைவரது ஆதரவாலும் அன்பினா லும் படம் மாபெரும் வெற்றி அடையும்'' என்கிறார் ஹீரோயின் நிக்கி கல்ராணி.

""செல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. நாம் செய்யும் லைக்குகள், ஷேர்கள் ஆகியவற்றால் நடக்கும் பின்னணி என்ன என்பதை எடுத்துக்கூறும் படம்தான் "கீ.' நிக்கி கல்ராணி ஒரு சின்சியரான நடிகை'' என டைரக்டர் காலீஸும் நிக்கி புகழ் பாடினார்

cine090419
இதையும் படியுங்கள்
Subscribe