யாரிப்பாளர் சீ.வி. குமார் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பாக "ஜாங்கோ' எனும் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.

Advertisment

இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகவும், "முண்டாசுப்பட்டி' படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய மனோகார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

Advertisment

jackport

சதிஷ் என்னும் புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மிர்னாளினி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், ஆர்.ஜே. ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளசி, சந்தானபாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

"ஜாங்கோ' படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மகாராஷ்ட்ரா நவ்நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான சதிஷ்குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து துவக்கிவைத்தார்.

Advertisment

இணைத் தயாரிப்பு- சுரேந்திரன் ரவி, ஒளிப்பதிவு- கார்த்திக் கே. தில்லை, இசை- நிவாஸ் பிரசன்னா, படத்தொகுப்பு- ராதா கிருஷ்ணன் தனபால், கலை- கோபி ஆனந்த், காஸ்ட்யூம் டிசைனர்- மீனாக்ஷி ஷ்ரிதரன், சண்டைப் பயிற்சி- ஹரி திணேஷ், புரொடக்ஷன் கண்ட்ரோலர்- சின்னமனூர் கே. சதிஷ் குமார், போஸ்டர் டிசைன்- வின்சிராஜ், எக்ஸ்கியூடிவ் புரொடியூசர்- ஸ்ரீ சக்ரா ஏ., மக்கள் தொடர்பு- நிகில்.