"குக்கூ', "ஜோக்கர்' ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் "ஜிப்ஸி' படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இயக்குநர்களான பா. ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா ஆகியோர்களும், பிரபல தயாரிப்பாளர்களான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ்.ஆர். பிரபு மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Advertisment

rajumurugan

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, "அருவி' படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். "நாச்சியார்' படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

"ஜிப்ஸி'யில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்கும் நாயகி மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.