சர்வாவும் மலரும் உயிருக்குஉயிராய் காதலிக்கிறார்கள். ஆடல் பாடலுமாக சுற்றித்திரியும் மலருக்கு தலையில் இடிவிழுந்ததுபோல் ஒரு செய்தி. தனது காதலனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியாகிறாள். காதலன் சர்வாவைத் தேடி அலைந்து அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்கிறாள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jai_3.jpg)
அவன் இல்லாத அந்த ரூமையையே ஏக்கமாய்ப் பார்த்துகொண்டிருக்க, சர்வாவும், அவன் மனைவி திவ்யாவும் ரூமிற்குள் வர, மலர் ஒளிந்துகொள்கிறாள். இருவரும் படுக்கையில் கட்டிப்பிடித்து புரள... மலர் கோபமடைகிறாள். கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள்? சர்வா வாக ஜெய், காதலி மலராக ராய்லட்சுமி, மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரசா நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப் பட்டது. இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமி நடித்திருக்கிறார். அதுவே படத்தின் சஸ்பென்ஸ். இதுதான் "நீயா-2' படத்தின் முக்கிய மேட்டர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/jai-t.jpg)