மிழ்த் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், "வேதாளம்', "அரண்மனை- 1 மற்றும் 2', "மாயா', "பாகுபலி- 1', "சென்னை- 28' 2-ஆம் பாகம், "இது நம்ம ஆளு' "காஞ்சனா', "சிவலிங்கா' (தெலுங்கு), "ஹலோ நான் பேய் பேசுறேன்' உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, தற்போது தனது அபிஷேக் பிலிம்ஸின் முதல் படமாக இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ்குமார் நடிக்க "சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்துவருகிறார்.

Advertisment

gv

இதைத் தொடர்ந்து தற்போது ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் ஒரு திகில் படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது அபிஷேக் பிலிம்ஸ்.

Advertisment

கதை, வசனம் எ. முருகன் எழுத, இயக்குநர் எழில் திரைக்கதை எழுதி இயக்குகிறார் படத்தில் ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், சம்ஸ், நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால், கோவை சரளா, மதுமிதா, "நான் கடவுள்' ராஜேந்திரன், "ஆடுகளம்' நரேன், வையாபுரி, வெண்பா, மனோபாலா, சித்ரா லக்ஷ்மணன் என நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது.