Advertisment

ரொம்ப கஷ்டம்தான் -ஹீரோ கதிர்!

/idhalgal/cinikkuttu/its-very-hard-hero-radiator

பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் டைரக்ஷனில் உருவாகியுள்ள "பரியேறும் பெருமாள்' ஹீரோ கதிர் நம்மிடம் பேசும்போது""பரியேறும் பெருமாள் படம் நானாகத் தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு.

Advertisment

நண்பர் ஒருவர்மூலமாக இயக்குநர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை. தேடிப்போய் நின்றேன்.

பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் டைரக்ஷனில் உருவாகியுள்ள "பரியேறும் பெருமாள்' ஹீரோ கதிர் நம்மிடம் பேசும்போது""பரியேறும் பெருமாள் படம் நானாகத் தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு.

Advertisment

நண்பர் ஒருவர்மூலமாக இயக்குநர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை. தேடிப்போய் நின்றேன். அவருக்கும் நான் சரியாக இருப்பேன் எனப்பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது. அது பிரெஷ்ஷாக இருக்கிறது. அதனாலேயே இந்தப்படத்தில் என் நடிப்பை விதம்விதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது.

Advertisment

kathir

திருநெல்வேலிலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. மாலையில்கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில்தான் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது, குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளைப் படமாக்குவோம். மொட்டை வெயிலிலில் பொட்டல் வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தைத் தேடிப் போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும்.. அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பெட்டர் என உட்கார்ந்துவிடுவேன்..

என்னதான் நன்றாக நடித்திருந் தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டுசேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்று தான். ஆனால் அதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது அதனால்தான் பார்த்து பார்த்துக் கதைகளைத் தேர்வு செய்கிறேன்.

அடுத்து வெளியாக இருக்கும் "சிகை' படத்தில்கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் தான். அதில் நான் நடித்துள்ள இருவித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும். அது படத்தைப்பற்றி, என்னைப்பற்றி நிறையநாள் பேசவைக்கும்'' என்கிறார் கதிர் கண்களில் நம்பிக்கை மின்ன...

cine091018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe