Advertisment

'அது' இல்லேன்னா சரிப்படுமா?

/idhalgal/cinikkuttu/it-right

நிவேதா பெத்துராஜ் ஹாலிவுட்டுக்கு போகப்போகிறாராம். இதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார்.

Advertisment

தெலுங்கில் ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்த நிவேதா பாலிவுட் போவார் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், அவர் ஹாலிவுட்டையே குறிவைக்கிறார் என்றால் எப்படி இருக்கும்!

Advertisment

nivetha

""எனது பிரதர்தா

நிவேதா பெத்துராஜ் ஹாலிவுட்டுக்கு போகப்போகிறாராம். இதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார்.

Advertisment

தெலுங்கில் ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்த நிவேதா பாலிவுட் போவார் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், அவர் ஹாலிவுட்டையே குறிவைக்கிறார் என்றால் எப்படி இருக்கும்!

Advertisment

nivetha

""எனது பிரதர்தான் இந்த சிந்தனையை எனக்குள் கொளுத்திப் போட்டவர். "அவெஞ்சர்ஸ்' பட வரிசையில் அடுத்த படத்துக்கான தேர்வு நடப்பதாகவும், நீ ஏன் முயற்சி செய்யக்கூடாது என்றும் அவர்தான் கேட்டார். தமிழில் ஏழு படங்களை முடிப்பேன் என்று நான் திட்டமிட்டேனா என்ன? எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்றுதான் ஹாலிவுட் முயற்சிக்குத் தயாராகிவிட்டேன். அடுத்த சில மாதங்களில் நியூயார்க் போகிறேன்'' என்கிறார்.

அதெப்படி இவ்வளவு நம்பிக்கையாக சொல்கிறீர்கள் என்று கேட்டால் சிரிக்கிறார். ""என்னைப் பார்க்கிறவர்கள் எனக்கு உலகளாவிய முகம் இருப்பதாகக் கூறுவார்கள். சிலர் என்னை பிரேசில்காரி என்றும், சிலர் என்னை தாய்லாந்துக்காரி என்றும் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு ஜாக்கிங், யோகா, மெடிடேஷன், தற்காப்புக் கலைகள் தெரியும். எனவே, எனக்கு எந்த வேடம் கிடைத்தாலும் செய்யும் நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார்.

""நான் கலகலப்பாகப் பழகக்கூடியவள் அல்ல. செட்டில் என்னுடைய வேலையைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தமாட்டேன். எனது படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டார்கள். அதுகுறித்து நான் புகார் செய்திருக்கிறேன். எனக்கு புதிய படம் புக் ஆகிற சமயங்களில் எல்லாம் இதுபோல யாரேனும் செய்கிறார்கள். பட வாய்ப்புக்காகப் படுக்கையைப் பகிர்வது தொடர்பான அனுபவம் எனக்கு இல்லை'' என்று ரொம்பவும் ஓபனா பேசுகிறார். இவர் எப்படி ஹாலிவுட்டில் தாக்குப்பிடிப்பார் என்பதை வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கலாம்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe