ம் 10 புரொடக்ஷன் சார்பில், எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "பக்ரீத்.' இதில் விக்ராந்த் நாயகனாகவும், வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல்; ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி. இமான் இப்படத்திற்கு இசை யமைத்துள்ளார்.

Advertisment

dd

இப்படத் தின் பத்திரிகை யாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குநர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகித் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணி அமுதவன், கலை இயக்குநர் மதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விக்ராந்த் பேசும்போது, ""நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம்போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை; இனியும் வராது.

முருகராஜ் அண்ணனை எனக்கு 13 வருடமாகத் தெரியும். நிறைய நொந்துவிட்டார். ஆனால் இந்தக் கதைமீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்தப் படத்தில் வரும் ஒட்டகத்தைக் கொண்டு வருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார்'' என்றார்.

வசுந்தரா பேசும்போது, ""நல்ல படங்களுக்கு பத்திரிகையாளர்கள் சப்போர்ட் பண்ணு வாங்க. இந்தியாவிலே ரொம்ப சிறந்த படமாக "பக்ரீத்' வந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு அனுபவம் எந்தப் படத்திலும் எனக்கு கிடைத்தது இல்லை.'' என்றார்.

இயக்குநர் ஜெகதீசன் சுபு பேசும் போது, ""வசுந்தராவின் வாய்ஸ் எனக்குப் பிடிக்கும். அன்பைக்கூட அவர் சத்தமாகத்தான் வெளிப்படுத்துவார்'' என்றார்.