கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன். சி தயாரித்து இயக்கி யுள்ள படம் பேரழகி ஐ.எஸ்.ஓ.'
"நீ என்ன மாயம் செய்தாய்', "மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், "காளி' படத்தில் அறிமுகமாகி, "இஸ்பேடு' ராஜாவும் இதய ராணியும்' படம்மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் நடிகை சச்சு, இயக்குநர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iso_0.jpg)
"நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.
படத்தின் இயக்குநர் விஜயனிடம் பேசியபோது...
"பேரழகி ஐ.எஸ்.ஓ' ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர், தான் எப்போ தும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர் களைக் கொண்டு ஒரு மருந்து கண்டுபிடிக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவக் குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.
ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தி யாக மாறிவிடுகிறார். ஷில்பாதான் அந்த ரோலைச் செய்துள்ளார்.
ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக "பேரழகி ஐ.எஸ்.ஓ' இருக்கும்'' என்றார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/iso-t.jpg)