Advertisment

ஐ.பி.எஸ். அதிகாரியும் நடிகையும்!

/idhalgal/cinikkuttu/ips-officers-and-actress

ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் படுக்கைக்கு கூப்பிடும் இம்சையை "மீ டூ'-வில் போட்டுத் தாக்குகிறார்கள் நடிகைகள். அது இம்சை அல்ல; இச்சைப்பட்டால் நடப்பது என்கிறார் ஆன்ட்ரியா. "இருட்டு அறையில் முரட்டுக்குத்து' நாயகி யாஷிகா ஆனந்த், ""பெரிய டைரக்டர் ஒருவர் எனது அம்மாவிடம் உங்கள் மகள் அதுக்கு ஓ.கே.ன்னா ஹீரோயின் சான்ஸ் ஓ.கே. எனச் சொன்னதும் பதறிவிட்டார் அம்மா. ஒரு பெரிய போலீஸ் அதிகாரியு

ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் படுக்கைக்கு கூப்பிடும் இம்சையை "மீ டூ'-வில் போட்டுத் தாக்குகிறார்கள் நடிகைகள். அது இம்சை அல்ல; இச்சைப்பட்டால் நடப்பது என்கிறார் ஆன்ட்ரியா. "இருட்டு அறையில் முரட்டுக்குத்து' நாயகி யாஷிகா ஆனந்த், ""பெரிய டைரக்டர் ஒருவர் எனது அம்மாவிடம் உங்கள் மகள் அதுக்கு ஓ.கே.ன்னா ஹீரோயின் சான்ஸ் ஓ.கே. எனச் சொன்னதும் பதறிவிட்டார் அம்மா. ஒரு பெரிய போலீஸ் அதிகாரியும் என்னை ட்ரை பண்ணிப் பார்த்தார். மிரட்டிப் பார்த்தார்'' என வேறொரு டிசைனில் வெடி கொளுத்தினார்.

Advertisment

adithirao

லேட்டஸ்ட் கிளுகிளு மீ டூ என்னன்னா...

லேடிக்கும் லேடிக்கும் கசமுசாவான சங்கதிதான். 2015-ல் "வானவில்' படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தனுஷின் "தொடரி', ஜோதிகாவின் "மகளிர் மட்டும்', சிவகார்த்திகேயனின் "வேலைக்காரன்'. இப்போது ரஜினியின் "2.0'-விலும் நடித்திருக்கிறார்.

Advertisment

அந்த மாயா கிருஷ்ணன்மீது ஒரு மாதிரியான கிளுகிளு புகாரைக் கிளப்பியிருக்கார் மாடல் அழகியும் நடிகையுமான அனன்யா ராம்பிரசாத். ""2016-ஆம் ஆண்டு மாயாவை சந்திக்கும்போது எனக்கு வயது 18. நல்ல ஆலோசனைகள் கூறியதால் முழுமையாக அவரை நம்பினேன். ஒரு கட்டத்துக்குமேல் என்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

yashika

என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார். இருவரும் ஒரே அறையில் ஒரே பெட்ரூமில் ஒன்றாகப் படுக்கும் நிலைக்கு நிலைமை சீரியசாகப்போனது. ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது'' என்கிறார் அனன்யா.

ஆனால் மணிரத்னத்தின் "செக்கச் சிவந்த வானம்' ஹீரோயின்களில் ஒருவரான அதிதிராவ் ஹைதாரி சொல்வது வேறுமாதிரியாக இருக்கிறது; புது மாதிரியாகவும் இருக்கிறது. ""சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குன்னும் சொல்லமுடியாது; இல்லேன்னும் சொல்ல முடியாது. பெட்ரூம் அட்ஜெஸ்மென்ட் பண்ணமுடியாது எனச் சொன்னதற்காகவே மூன்று படங்களில் வாய்ப்பை இழந்தேன். ஆனால் வாரிசு நடிகைகளுக்கு இந்த இம்சை கிடையாது. என்னைப் போன்றவர்களுக்குத்தான் இம்சையெல்லாம்.

சினி ஃபீல்டில் நம்பர்-1 ரேசை நோக்கியோ, விருது வாங்கணும் என நினைத்தோ நான் நடிப்பதில்லை. கௌரவமான டைரக்டர்கள், கண்ணியமான வேலை, இதுதான் எனது பாலிஸி'' என்கிறார் அதிதிராவ்.

இந்த பாலிஸியும் நல்லாத்தானே இருக்கு.

-கைப்புள்ள

cine271118
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe