த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதைதான் "ஐ.பி.சி. 376.' நந்திதா ஸ்வேதா முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி பண்ணுவதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ""இது ஹீரோக்கள் பண்ணவேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை. பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்'' என்கிறார் டைரக்டர் ராம்குமார் சுப்பா ராமன்.

Advertisment

nandhitha

பிரபு சாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராம்குமார் சுப்பா ராமன். "தகராறு', "அண்ணாத்துரை' படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். "கோலமாவு கோகிலா' படத்தின் எடிட்டர் த. நிர்மல் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.

Advertisment

படத்தின் தயாரிப்பாளர் பிரபாகர் "96', "ஜூங்கா', "பென்சில்' போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர். பல தியேட்டர்களையும் நடத்திவருகிறார்.