Advertisment

அழியாத கோலங்கள்-2

/idhalgal/cinikkuttu/invisible-columns-2

பிரபல நாவலாசிரியர் கௌரி சங்கருக்கு (பிரகாஷ் ராஜ்) சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது.

Advertisment

அந்த விருதினை வாங்க டெல்லிக்குச் செல்லும் கௌரி சங்கர், தனது ஊரான தேனிக்குத் திரும்பாமல், சென்னையில் வசிக்கும் தனது கல்லூரித்தோழியான மோகனா (அர்ச்சனா) வீட்டிற்கு வருகிறார்.

Advertisment

தங்களது கல்லூரிக்கால நினைவு களை இருவரும் மனம்விட்ட

பிரபல நாவலாசிரியர் கௌரி சங்கருக்கு (பிரகாஷ் ராஜ்) சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது.

Advertisment

அந்த விருதினை வாங்க டெல்லிக்குச் செல்லும் கௌரி சங்கர், தனது ஊரான தேனிக்குத் திரும்பாமல், சென்னையில் வசிக்கும் தனது கல்லூரித்தோழியான மோகனா (அர்ச்சனா) வீட்டிற்கு வருகிறார்.

Advertisment

தங்களது கல்லூரிக்கால நினைவு களை இருவரும் மனம்விட்டுப் பேசுகின்றனர். கணவன் இறந்தது, கல்லூரியில் படிக்கும் தனது மகள், இப்போதைய வாழ்க்கை என அனைத் தையும் கௌரி சங்கருடன் பகிர்கிறார் மோகனா.

rr

இரவு சாப்பிட்டு முடித்து படுக்கைக்குச் செல்லும் கௌரி சங்கருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிடுகிறார்.

அதன்பின், மோகனா சந்திக்கும் பிரச்சினைகள், நெருக்கடிகள், அவமானங்கள் ஆகியவற்றிலிருந்து மோகனா எப்படி மீள்கிறார் என்பதுதான் "அழியாத கோலங்கள்-2.'

பிரகாஷ்ராஜ், அவரது மனைவி சீதாவாக வரும் ரேவதி, அர்ச்சனா, குரூர போலீஸ் ஏ.சி.யாக வரும் நாசர், டாக்டராக வரும் மோகன் ராம் என ஒருசில கதாபாத்திரங்களுடன் "அழியாத கோல'த்தை அழகாகப் படமாக்கியிருக்கி றார் டைரக்டர் எம்.ஆர். பாரதி. ஒரே வீட்டிற்குள் படம் முழுவதும் பயணிப் பதால், இடைவேளைவரை டாக்குமென்ட்ரி ஃபீலிங் இருக்கிறது.

ஆனால், இடைவேளைக்குப்பின் மொத்தப் படத்தையும் அர்ச்சனா தூக்கிச்சுமந்து பார்வையாளனின் மனசைக் கலங்கடிக்கிறார். க்ளைமாக்சில் ரேவதியும் அர்ச்சனாவும் பேசிக்கொள்ளும் காட்சி ஃபர்ஸ்ட் கிளாஸ். டைரக்டர் எம்.ஆர். பாரதிக்கு பக்கா சப்போர்ட்டாக இருக்கிறார் கள் மியூசிக் டைரக்டர் அரவிந்த் சித்தார்த்தும், கேமராமேன் ராஜேஷ் கே. நாயரும். இப்போதைய வணிக வெறி சினிமாவிற்கிடையே இப்படத்தைத் தயாரித்த ஏ.எல். அழகப்பனையும், இணைத் தயாரிப்பாளர் ஈஸ்வரி ராவை யும் தாராளமாகப் பாராட்ட லாம்.

ஆண்- பெண்ணுக்கிடையே இருக்கும் களங்கமில்லாத நட்பைச் சொல்லும் இந்த "அழியாத கோலங்கள்', அழகான கோலங்கள்! அவ்வப்போது இந்த சினிமாக்களைப் பார்த்தால்தான் மனசு சமநிலையில் இருக்கும்.

cini101219
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe