Advertisment

அகோரியாக மிரட்டும் அறிமுக ஹீரோ!

/idhalgal/cinikkuttu/introducing-inti-hero-agori

த்ரா பிலிம் பேக்டரி சார்பில் என்.ஆர்.ஜி. ராஜேஷ் கண்ணா, என்.ஆர்.ஜி. சசிகலா ஆகியோர் தயாரிக்கும் படம் "மாரஹாதிபதி.' அறிமுக இயக்குநர் கௌதம் வெங்கட் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ராஜேஷ் கண்ணா அறிமுகமாகிறார். ஹீரோயினாக rajeshkhannaஅஷ்மிதா ந

த்ரா பிலிம் பேக்டரி சார்பில் என்.ஆர்.ஜி. ராஜேஷ் கண்ணா, என்.ஆர்.ஜி. சசிகலா ஆகியோர் தயாரிக்கும் படம் "மாரஹாதிபதி.' அறிமுக இயக்குநர் கௌதம் வெங்கட் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ராஜேஷ் கண்ணா அறிமுகமாகிறார். ஹீரோயினாக rajeshkhannaஅஷ்மிதா நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ராஜசிம்மன், ரஞ்சன் குமார், கராத்தே ராஜா, சேரன்ராஜ், "லொள்ளு சபா' மனோகர், திருப்பூர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

Advertisment

இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத வசிய மோகினி பேயை மைய மாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப் பட்டிருக்கிறது.

Advertisment

இதுகுறித்து இயக்குநர் கௌதம் வெங்கட் கூறுகையில், ""மாரகாதிபதி’ என்றால் மரணத்தின் அதிபதி என்று அர்த்தம். மூன்று ஜென்மங்களில் நடப்பதுபோல கதை அமைக் கப்பட்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்குமுன்பு நடக்கும் ஒரு கதை, அதற்குபிறகு மறு ஜென்மத் தில் நடக்கும் கதை. அதைத் தொடர்ந்து தற் போதைய காலகட்டத்தில் நடக்கும் கதை என்று மூன்றிலும் வெவ்வேறு கெட்டப்புகளுடன் ஹீரோ ராஜேஷ் கண்ணா நடித்திருக்கிறார். இந்த மூன்று ஜென்மங்களிலும் ஹீரோயினாக அஷ்மிதா நடித்திருக்கிறார்.

இதில் சில எபிசோட்கள் அகோரிகள் சம்பந்தப் பட்டவையாகவும் வருகின்றன. அதற்காக ஹீரோ நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு, நிஜமான அகோரிபோலவே நடித்திருக்கிறார்.

cine010119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe