Advertisment

காசு கொடுத்து நடிக்கல -சொல்வது அறிமுக நடிகர்!

/idhalgal/cinikkuttu/introducing-actor

விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திகில் படமான- பி.டி.ஜிஜு இயக்கத்தில் "ஈவர் கரவாது' படத்தில் விவசாயி vvvவேடத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் விஜயேந்திரா, பகவதி பாலா இயக்கத்தில் "வெற்றிக்கு ஒருவன்' ப

விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திகில் படமான- பி.டி.ஜிஜு இயக்கத்தில் "ஈவர் கரவாது' படத்தில் விவசாயி vvvவேடத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் விஜயேந்திரா, பகவதி பாலா இயக்கத்தில் "வெற்றிக்கு ஒருவன்' படத்தில் குணச்சித்திர நடிகராகவும், நேசமானவன் இயக்கத்தில் "அக்யூஸ்ட்?' படத்தில் வில்லத் தனம் கலந்த ஆன்டி ஹீரோவாக வும் நடித்திருக்கிறார்.

Advertisment

அவர் நம்மிடம்...

""கோவையில் பிறந்து, வளர்ந்து, அங்கேயே தொழில்செய்து வருகிறேன். தொழிலதிபர்கள் சினிமாவில் பணமுதலீடு செய்து ஹீரோ சான்ஸ் பெறுவதுபோல நானும் நடிக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. சினிமாவுக்காக எப்படி ஒவ்வொரு கட்டமாக வரவேண்டுமோ, அப்படித் தான் நானும் வந்தேன்.

Advertisment

நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களில் நடித்து வந்தேன். அதில் ஒரு குறும் படத்தில் கவுன்சிலர் வேடத்தில் நடித்திருந்ததைப் பார்த்த "ஈவர் கரவாது' பட இயக்குநர் பி.டி.ஜிஜு, விவசாயி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

சினிமா என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்காக நான் பல வருடங்கள் போராடித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். நிச்சயம் ஜெயிப்பேன், மக்கள் மனங்களில் இடம்பிடிப்பேன்'' என்கிறார்.

cine070819
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe