Advertisment

மிரட்டும் கவர்ùன்ட்! நயன்தாரா ஆப்சென்ட்! விஜய் அப்செட்!

/idhalgal/cinikkuttu/intimidating-cover-nayanthara-absent-vijay-upset

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "பிகில்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்துமுடிந்தது. சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் இன்ஜினீயரிங் கல்லூரியில் இருக்கும் மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் ஆயிரக்கணக்கில் விஜய் ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

Advertisment

படத்தை ஆகப்பெரிய பட்ஜெட் டில் தயாரித்த ஏ.ஜி.எஸ்.இன்டர் நேஷனல் பேனரின் கல்பாத்தி சகோதரர் கள், அர்ச்சனா கல்பாத்தி, டைரக்டர் அட்லீ, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "பிகில்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்துமுடிந்தது. சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் இன்ஜினீயரிங் கல்லூரியில் இருக்கும் மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் ஆயிரக்கணக்கில் விஜய் ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

Advertisment

படத்தை ஆகப்பெரிய பட்ஜெட் டில் தயாரித்த ஏ.ஜி.எஸ்.இன்டர் நேஷனல் பேனரின் கல்பாத்தி சகோதரர் கள், அர்ச்சனா கல்பாத்தி, டைரக்டர் அட்லீ, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், விவேக், ஆனந்தராஜ், மனோபாலா, யோகி பாபு, சௌந்தர் ராஜா, நடிகைகள் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா என "பிகில்' யூனிட்டே ஆடியோ விழாவில் ஆஜராகினார்கள்.

vijay

ஆனால், படத்தின் ஹீரோயினான நயன்தாரா மட்டும் ஆப்சென்ட் ஆனது ஹீரோ விஜய்யை ரொம்பவே அப்செட் டாக்கிவிட்டது. இதுகுறித்து "பிகில்' பட யூனிட்டைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரிடம் பேசினோம். """கோலமாவு கோகிலா', "ஐரா', "கொலையுதிர் காலம்' என நயன்தாரா நடித்த படங்கள் வரிசையாக ஊத்திக்கிட்டாலும் ,கொஞ்சங்கூட கெத்தைவிட்டுக் கொடுக் காம இருக்காரு. அவர் ஹீரோயினா நடிக்கும் எந்தப் படத்தின் புரமோ விற்கும் வரமாட்டேன்னா என்ன அர்த்தம்? அவருக்கு மனசுக்குள்ள பொம்பள அஜீத்துன்னு நினைப்பா?

Advertisment

இப்பக்கூட மெகா மெகா பட்ஜெட் டில் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து முடித்திருக்கும் "சைரா நரசிம்மா ரெட்டி' அக்டோபர் மாதம் ரிலீசாகப் போகுது. இந்தப் படத்தின் புரமோவிற்கு போகலேன்னா ஆந்திராவில் ரெட் கார்டு போடும் முடிவில் இருக்காங்க! இதுக்கடுத்து, முக்கியமான மேட்டர்... இப்ப ரஜினியுடன் நடிக்கும் "தர்பார்' படத்தின் ஆடியோ மற்றும் புரமோ ஃபங்ஷனுக்கு வராம இருந்துருவாரா நயன்தாரா? அதுக்கும் வராம டிமிக்கி கொடுத்துருன்னா அப்ப தெரியும் சங்கதி'' என கொதித்துக் கொந்தளித்துவிட்டார்.

vv

நயன்தாரா ஆப்சென்டான அப்செட் ஒருபுறம் என்றால், "விஜய் பட ஃபங்ஷனுக்கு காலேஜ் ஆடிட்டோரியத்தை எப்படிக் கொடுக்கலாம்? அதற்கான விளக்கத்தைச் சொல்லுங்கள்' என கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி மேலும் அப்செட்டாக்கியுள்ளது தமிழக அரசின் உயர் கல்வித்துறை.

இதுக்குக் காரணம் என் னன்னா... அந்த விழாவில் பேசிய விஜய் பேனர் கலாச்சாரத்தைக் கண்டித்ததோடு, ""பேனர் வச்சவரை விட்ருவாங்க... அதை அச்சடித் துக் கொடுத்தவரை அரெஸ்ட் பண்றாங்க! யாரை எங்கே வைக்கணுமோ அங்கே வைக்கணும்...'' என எடப்பாடியை போட்டுத் தாக்கினார் விஜய். இதுதான் இப்போது விளக்க நோட்டீசாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

"பிகில்' படம் ரிலீசாகும்போது, இன்னும் என்னென்ன பிரச்சினைகளெல்லாம்- எப்படி எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுக்கப் போகுதோ?

-பவர் பரசு

cini081019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe