ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகாவிஷ்ணு இயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் "நான் செய்த குறும்பு' படத்தின் தொடக்கவிழா பூஜை வழக்கமான விழாவாக இல்லாமல் வித்தியாசமானதாக அமைந்திருந்தது.

Advertisment

audiolaunch

விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமரவைத்தனர். மங்கல இசை ஒலித்தது. வேதமந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி, சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, புது வளையல் கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப் பட்டு படக் குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப்பட்டனர். இயக்குநர் மற்றும் படக் குழுவினர் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்மணிகள் காலில் விழுந்து வணங்கினார்கள் . அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.