Advertisment

நீதியைச் சொல்லும் "அநீதி'!

/idhalgal/cinikkuttu/injustice-tell-justice

நீட் தேர்வால் பலிலியான அனிதாவின் துயரக்கதையை மையமாக வைத்து "அநீதி' எனும் குறும்படம் உருவாகியிருக்கிறது. இதில் ராஜா ராணி பாண்டியன், பிரதீப் கே. விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி. பாலசாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisment

அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்தி ருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்கிற இளைஞ

நீட் தேர்வால் பலிலியான அனிதாவின் துயரக்கதையை மையமாக வைத்து "அநீதி' எனும் குறும்படம் உருவாகியிருக்கிறது. இதில் ராஜா ராணி பாண்டியன், பிரதீப் கே. விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி. பாலசாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisment

அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்தி ருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்கிற இளைஞர் இயக்கி யிருக்கும் இப்படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Advertisment

இயக்குநர் பாலாஜி சக்திவேல்- ""இன்றைக்கு ஒரு பொறுப்பான தலை முறையைப் பார்க்க முடிகிறது. படத்தின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கும் திருமுருகன் காந்திதான் பெரிய இன்ஸ் பிரேஷன்.''

gvprakash

நடிகர் கதிர்- ""இந்த விழாவிற்கு வந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுறேன். திருமுருகன்காந்தி சார் பக்கத்தில் இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்.

அவர் பேசும் காணொளிகள்தான் இன்றைய இளைஞர்களுக்கு பல உண்மைகளை விளக்குகிறது.''

.ஜி.வி. பிரகாஷ் """அநீதி' படத்தைப் பாதிக்குமேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவை பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே அதை வைத்துக் கொள்ளட்டும். தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை.

திருமுருகன் காந்தி - ""இங்கிருக்கும் அனைவரையுமே தோழர்களாகதான் பார்க்கிறேன். இந்தக் குறும்படம் விருதுகள் வாங்கியதற்காக நான் வரவில்லை. இந்தப்படத்தின் கதை தாங்கி நின்ற துயரம் நம் அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தில் வந்த ஒரு காட்சி, ""காவி உடை அணிந்த ஒருவர் பஸ்ஸில் போகும்போது எச்சில் துப்புகிறார். அந்த எச்சில் "தமிழன்டா' என்ற பனியன் போட்டிருந்த பையன்மீது விழுகிறது. இந்த ஒரு காட்சியே உண்மையை உணர்த்தி விட்டது. அனிதாவின் மரணத்தின்போது நான் சிறையில் இருந்தேன். சிறையிலே ஒரு கொந்த ளிப்பான மன நிலையில் இருந்தேன்.

இயக்குநர் ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ்- ""நீட் தேர்வு பற்றி திருமுருகன் காந்தி பேசும் வீடியோக்களை பார்த்து தான், இந்தப் படம் இயக்கும் எண்ணம் ஏற்பட்டது. இந்தப் படம் பற்றி பேசச் சென்ற போதுதான், அவர் கைதானார்.

அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ் பிரேஷன். எனக்கு உறுதுணையாக இருக்கும் நான்குபேருக்கு மிகவும் நன்றி.''

cine041218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe