Advertisment
/idhalgal/cinikkuttu/iniya-action

ம் சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் "காபி' படத்தில் இனியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Advertisment

இனியா என்ன சொல்றாருன்னா...

""சத்யபாமா என்ற

ம் சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் "காபி' படத்தில் இனியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Advertisment

இனியா என்ன சொல்றாருன்னா...

""சத்யபாமா என்ற அதிரடியான போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன். என் திறமையை நிரூபிக்கும் ஒரு படமாக இது இருக்கும்.ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நானும் அடுத்த லெவலுக்கு போகக்கூடிய வலுவான படமாக இருக்கும்.

Advertisment

d

தமிழில் வலுவாக நான் கால் பதிக்க "காபி' படம் காரணமாக இருக்கும். ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது..

மலையாளத்தில் பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில், கிரண் என்கிற இயக்குநர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திர ஜித் நடிக்கும் "தாக்கோல்' என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்..

இன்னொரு சந்தோஷம் என்னன்னா... கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோட "துரோணா' -ங்கிற படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிட்டிருக்கேன். கல்வியை மையப்படுத்தி உருவாகிற சப்ஜெக்ட்..எனக்கு ரொம்ப நல்ல பேரை கொடுக்கும்.

தமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி. அது "காபி' படத்தின் மூலம் சரியாயிடும்.

மலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச "பரோல்'-ங்கிற படத்துக்காகவும், "பெண்களில்லா'-ங்கிற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதாநாயகி விருதை கேரள பிலிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு.

2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன்'' என்றார் இனியா.

அறிமுகமான படத்தின் தலைப்பை போலவே இவர் நிச்சயம் வாகை சூடுவார் என்று நம்புவோம்.

cine300419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe