"மைனா', "சாட்டை', "மொசக்குட்டி', "சவுகார்பேட்டை', "பொட்டு' ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து "சம்பவம்' படத்தைத் தயாரிக்கிறார்.

Advertisment

இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார் கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும், இவர்களுடன் "பக்ரீத்' படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குநர் ஏ. வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள்- நடிகைகள் பங்குபெறுகின்றனர்.

cc

நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாகத் தள்ளப்படும்போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.

இசை- அம்ரிஷ், ஒளிப்பதிவு- முத்து கே. குமரன், படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா, வசனம்- நீலன் கே. சேகர், பாடல்கள்- அருண்பாரதி, முருகானந் தம், கலை- ஏ. பழனிவேல், நடனம்- தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை- ஜி. சங்கர், நிர்வாக தயாரிப்பு- கேஆர்.ஜி. கண்ணன்