ர்க்கிள்பாக்ஸ் என்டர்டெயின் மென்ட் நிறுவனம் சார்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.

santhanam

santhanam

அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்னும் பாலிலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தியில் வெளியான "மாஸ்ட்ரம்', "த பர்ஃபெக்ட் கேர்ள்', "லவ் கேம்ஸ்' என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். முக்கிய கேரக்டரில் "பாஜிராவ் மஸ்தானி' என்ற இந்திப் படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்குபின் தெலுங்கு நடிகர் சாய்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு கோபி ஜெகதீஸ் வரன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான்பால் படத் தொகுப்பாளராகப் பணியாற்ற, ராஜா கலை இயக்கத்தை கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜான்சன். இவர் நாளைய இயக்குநர் சீஸன்-4-ல் வெற்றிபெற்றவர்.

பூஜையுடன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது.

Advertisment