"ஐ ஆம் வெரி ஹேப்பி'' -ஜீவா உற்சாகம்!

/idhalgal/cinikkuttu/im-very-happy-jeeva-enthusiasm

ண்ணிக்கை யைவிட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு "சங்கிலி புங்கிலி', "கலகலப்பு-2' என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஜீவா.

"" "சங்கிலி புங்கிலி' படமும், "கலகலப்பு- 2' படமும் வெற்றிபெற்று எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது...

அதற்குபிறகு நிறைய கதைக

ண்ணிக்கை யைவிட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு "சங்கிலி புங்கிலி', "கலகலப்பு-2' என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஜீவா.

"" "சங்கிலி புங்கிலி' படமும், "கலகலப்பு- 2' படமும் வெற்றிபெற்று எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது...

அதற்குபிறகு நிறைய கதைகள் கேட்டேன். அதில் சிறந்த தாக "கொரில்லா', "ஜிப்ஸி' என இரண்டை மட்டும் தேர்வுசெய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டி ருக்கிறேன்... இப்போ எங்கள் சூப்பர்குட் பிலிம்ஸின் 90-ஆவது படத்தில் நானும் அருள்நிதியும் சேர்ந்து நடிக்க ஷூட்டிங் விறுவிறுப்பா போயிட்டிருக்கு... டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம். ஜாலியான படமா இருக்கும்..

jeeva

அப்புறம் முக்கியமான சங்கதி என்னன்னா...

"1983 வேர்ல்ட் கப்' என்ற இந்திப் படத்துல நடிக்கிறேன். ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. "பாகுபலி' எப்படி ஸ்கிரீன்ல பிரம் மாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ... அதுமாதிரி இந்தப் படமும் இருக்கும்... 100 கோடிக்குமேல செலவுசெய்து எடுக்குற படம்...

நான் கிரிக் கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஆடிருக்கேன். ஜெயிச்சிருக்கேன். அப்படிப்பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்பந்தப் படம்னு சொல்லும்போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்...

1983-ல் இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக்கொடுத்த அந்த சம்பவங்கள்தான் கதைக்களம்...

கிட்டத்தட்ட 100 நாள் லண்டன்ல ஷுட்டிங்...

அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம். அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார்.

அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்குப் பெருமைதானே... தமிழ்நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக் கிட்டா நாலு பேர்தானே...

அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே'' என்கிறார் உற்சாகத் துள்ளலுடன்.

cine290119
இதையும் படியுங்கள்
Subscribe