Advertisment

நான் கர்ப்பமில்லை... ஆனால்...

/idhalgal/cinikkuttu/im-not-pregnant

நீண்ட நாட்களாக ஆஸ்திரேலிய போட்டோகிராபரான ப்யூ ஆன்ட்ரு நீபோன் எனபவரை காதலித்துவரும் இலியானா கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி உடல் பருமனானதாக செய்திகளும், அவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தவண்ணம

நீண்ட நாட்களாக ஆஸ்திரேலிய போட்டோகிராபரான ப்யூ ஆன்ட்ரு நீபோன் எனபவரை காதலித்துவரும் இலியானா கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி உடல் பருமனானதாக செய்திகளும், அவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தவண்ணம் இருந்தன. இதைத் தொடர்ந்து அவருக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின.

Advertisment

iliyana

இதுகுறித்து நீண்டநாள் மவுனம் காத்த இலியானா தற்போது இந்த பிரச்சினை குறித்து விளக்கமளித்து பேசியபோது.... ""எங்களுக்கு உண்மையில் திருமணமாகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நான் சந்தோ‌ஷப்படுவேன். விரைவில் இது நடக்க வேண்டும் என்றும் விருப்பப்படுகிறேன். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எனது காதலர் என்னைப் புரிந்துகொண்டவராக இருக்கிறார். காதலில் நம்பிக்கை மிக முக்கியம்.

Advertisment

iliyana

மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது நான் முதலில் தேடும் மனிதர் ஆன்ட்ருதான். பொதுவாக நான் மனஅழுத்தத்தில் இருக்கும்போது யாரையுமே பார்க்கமாட்டேன். வீட்டிலேயே அடைந்துகிடப்பேன். எல்லாவற்றையும் மீறி யாரேனும் என்னைத் தொடர்புகொள்ள நேரிட்டால் அவர்களை பயங்கரமாக திட்டிவிடுவேன். அதை முற்றிலும் மாற்றியது ஆன்ட்ருதான்'' என்று ரொம்பவே புலம்புகிறார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe