நாம் திரையில் பார்க்கும் முன்வரிசை நடிகர்கள் தவிர, மற்றவர்கள் நம் நினைவுகளில் பதிவதில்லை.

Advertisment

அதற்கடுத்த இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் காலதாமதமாகவே பார்வையாளர் மனதில் பதிவார்கள். மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் வணிகப் படங்களில் அவர்கள் முகம் நமக்குள் பதிய முகாந்திரம் இல்லாமல் போகிறது. இப்படி மூன்றாவது வட்டத்திலிருந்து இரண்டாவது வட்டத்திற்குப் போராடும் நடிகர்களில் ஒருவர்தான் ஜி.எம் .சுந்தர்.

Advertisment

இனி ஜி.எம். சுந்தர் பேசுகிறார்...

sss

""எனக்குப் பூர்வீகம் திண்டுக்கல்தான் என்றாலும், அப்பாவின் வேலை நிமித்தமாக சென்னை வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டோம். 1982-ல் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். நாசர், அர்ச்சனா, பப்லு போன்றோர் என் திரைப்படக் கல்லூரித் தோழர்கள் . எழுத்தாளர் அனந்துமூலம் இயக்குநர் பாலசந்தர் அவர்களிடம் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படம்தான் "புன்னகை மன்னன்.' அதன்பிறகு கமல் சாரின் "சத்யா', அவர் தயாரித்த "கடமை கண்ணியம் கட்டுப்பாடு' அதன்பிறகு "கிழக்குக் கரை', "பொன்னுமணி', "அதர்மம்', "தொட்டி ஜெயா', 'எங்க ஊரு காவல்காரன்' போன்று பல நாயகர்களுடன், பலதரப்பட்ட படங்களுடன் பல வகையான பாத்திரங்களுடன் என் திரைப்பயணம் தொடர்ந்தது.

Advertisment

கூத்துப்பட்டறையின் முதல்வரிசை நாடகக் கலைஞன் நான். கூத்துப்பட்டறை அரங்கேற்றும் நாடங்களுக்கெல்லாம் நான்தான் பெரும்பாலும் நாயகன்.

இப்படி மேடையிலும் நடித்து என் நடிப்பு பசியைப் போக்கிக் கொண்டு சினிமா வாய்ப்புக்காக போராடத்தான் வேண்டியிருந்தது. இந்த உண்மையை ஒப்புக்கொள்வ தில் எனக்கொன்றும் வெட்க மில்லை.

சற்றே காலம் கடந்து வந்தாலும், "காதலும் கடந்து போகும்' படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குநர் நலன் குமாரசாமி. "மௌனகுரு' படத்தை இயக் கிய சாந்தகுமார் தனது "மகாமுனி' படத்தில் எனக்கு நல்ல கதா பாத்திரம் கொடுத்திருக்கிறார்.

இது எனது சமீபத்திய சந்தோ ஷம்'' என்றார்.