யக்குநர் சிகரம்' மறைந்த கே. பாலசந்தரின் உதவியாளர் மோகன் நடத்திய "கே.பி. 89' நிகழ்ச்சி சென்னை யில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவகுமார் பேசும்போது, ""இயக்குநர் ஐயா அவர்களுக்குப் பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான்தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குநர் என்றால் அது ஐயா கே. பாலசந்தர் அவர்கள் தான்'' என்றார்.

dd

Advertisment

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, "" ஒரு இசையமைப்பாள ருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. என்ன செய்வதென்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன். காரணம்- நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது.

அந்த ஏழாண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்றெண்ணி முப்பத்தேழு இசை அமைப்பாளர் களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .

அந்த நிலையில் ஒரு நாள் பாலசந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார். பாலசந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை. மூன்று படத்திலும் பாடல் கள் ஹிட். திலீப்தான் ஏ.ஆர். ரகுமான்.

Advertisment

மீண்டும் களம் எனக்கு வந்தது.

திரையுலகில் என்னை அறிமுகப் படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்த வர் பாலச்சந்தர்'' என்றார்.

இவ்விழாவில், சமுத்திரகனி, கலைப்புலி எஸ். தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குநர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குநர் சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி.

உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குநர் அஸ்லாம், ஐந்து கோவிலான் மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குநர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.