சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ். யசோதா தயாரித்திருக்கும் படம் "என்னோடு நீ இருந்தால்.' படத்தில் மு.ரா. சத்யா கதாநாயகனாக நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார்கள். மற்றும் வெ.ஆ. மூர்த்தி, ரோகிணி, அஜய் ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Advertisment

dd

தயாரிப்பு மேற்பார்வை- எஸ்.ஆனந்த், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்- மு.ரா. சத்யா.

படத்தின் இயக்குனர் மு.ரா. சத்யாவிடம் படம் பற்றிக் கேட்ட போது-""லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது.

யாரிடமும் உதவியாளராகப் பணிபுரியவில்லை. படங்களைப் பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.

இந்தப் படம் வெளிவந்தபிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமுதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்தப் பாதிப்பு என்ன? ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது இந்தப் படம் பார்த்தபிறகு அதை உணர்ந்து அதிர்சியடையும் வண்ணம் படத்தின் திரைக்கதை இருக்கும்'' என்றார்.