Advertisment

சின்னத்திரை சங்கதிகள்! ராசாத்தி ரவுசுகள்

/idhalgal/cinikkuttu/icon-clubs-rasati-roushs

ன் டி.வியில் மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்தது "ராசாத்தி' சீரியல். குஷ்புவின் ஆவ்ணி சினி மேக்கர்ஸ் சினிமா தயாரிப்புக் கம்பெனியின் நிர்வாகியாக இருந்த அன்பு தான் "ராசாத்தி'-யின் தயாரிப்பாளர்

ன் டி.வியில் மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்தது "ராசாத்தி' சீரியல். குஷ்புவின் ஆவ்ணி சினி மேக்கர்ஸ் சினிமா தயாரிப்புக் கம்பெனியின் நிர்வாகியாக இருந்த அன்பு தான் "ராசாத்தி'-யின் தயாரிப்பாளர். சினிமா டைரக்டரான ராஜ்கபூர்தான் இந்த சீரியலின் டைரக்டராக இருந்தார். சீரியலின் கதாநாயகியாக- அதாவது ராசாத்தியாக பவானிரெட்டி நடிக்கிறார். சீரியல் ஆரம்பித்த இரண்டு வாரங்களில் டி.ஆர்.பி.ரேட் ஏறாத தால், நேரத்தை மாற்றியது சன் டி.வி.

Advertisment

rr

இப்போது மேட்டர் என்னன்னா... சினிமா எடுக்கும் ஞாபகத்தில் பட்ஜெட்டை தாறுமாறாக ஏற்றிவிட்டதால், டைரக்டர் ராஜ்கபூரைத் தூக்கிவிட்டு, விஜய்யை வைத்து "வேட்டைக்காரன்' படத்தை எடுத்த பாபு சிவனை டைரக்டராக்கிவிட்டார் தயாரிப்பாளர் அன்பு.

அதைவிட லேட்டஸ்ட் மேட்டர் என் னன்னா... வில்லி சிந்தாமணி (மாஜி கவர்ச்சி நடிகை விசித்ரா)யின் கொடுமைகளிலிருந்து ராசாத்தியைக் காப்பாற்றும் கேரக்டரில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து என்ட்ரியாகி விட்டார் தேவயானி. இன்னும் யார் யாரெல் லாம் புதுசு புதுசா என்ட்ரியாகப் போகிறார் களோ?

Advertisment
cini171219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe