எஸ்.என்.எஸ். பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் "எனை சுடும் பனி.'
இந்தப் படத்தில் கதாநாயகனாக வெற்றி நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய "டீ கடை பெஞ்ச்' படத்தில் இரண்டா வது கதாநாயகனாகவும் "என் காதலி சீன் போடுறா'' படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்தவர். இந்தப் படத்தில் கதாநாயகனாக உயர்வுபெறுகிறார்.
கே. பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ice_1.jpg)
கதாநாயகிகளாக உபாசனா ஆர்சி. சுமா பூஜாரி நடிக்கிறார்கள்.மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், "தலை வாசல்' விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா.
படத்தைப் பற்றி இயக்குநர் ராம்ஷேவா என்ன சொல்றாருன்னா...
""சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படித்து பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும்... உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்.
வெற்றி, சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன்.
அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பது திரைக்கதை சுவாரஸ்யம். இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்'' என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/ice-t.jpg)