Advertisment

நடிகையை மிரட்டும் ஐ.ஏ.எஸ்

/idhalgal/cinikkuttu/ias-threatens-actress

ந்த ஸ்ரீரெட்டி வேற அப்பப்ப குறுக் கமறுக்க ஓடிக்கிட்டு "வாய்யா... வாய்யா... வந்து பாருய்யா' என தமிழ்நாட்டில் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார். இனிமேல், அவரால் தப்பித் தவறிக்கூட ஆந்திரா பக்கம் போகமுடியாதுபோல! ""ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டபோது மிருக பாணியில் நடந்துகொண்டார். அவரால் நான் அனுபவித்த சித்திரவதை கொஞ்ச நஞ்சமல்ல'' என சில வாரங்களுக்குமுன்பு ஏடாகூடமாக ட்விட் போட்டிருந்தார் ஸ்ரீரெட்ட

ந்த ஸ்ரீரெட்டி வேற அப்பப்ப குறுக் கமறுக்க ஓடிக்கிட்டு "வாய்யா... வாய்யா... வந்து பாருய்யா' என தமிழ்நாட்டில் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார். இனிமேல், அவரால் தப்பித் தவறிக்கூட ஆந்திரா பக்கம் போகமுடியாதுபோல! ""ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டபோது மிருக பாணியில் நடந்துகொண்டார். அவரால் நான் அனுபவித்த சித்திரவதை கொஞ்ச நஞ்சமல்ல'' என சில வாரங்களுக்குமுன்பு ஏடாகூடமாக ட்விட் போட்டிருந்தார் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் ஜனசேனா என்ற பெயரில் பவன் கல்யாண் கட்சி நடத்துவதால், அக்கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் ஆவேசமானார்கள்.

Advertisment

ss

இதற்கிடையே ஆந்திர சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் கல்யாணி என்பவருக்கும் ஸ்ரீரெட்டிக்கும் இடையே "தொழில்'ரீதியான பழைய போட்டியால் கல்யாணிமீது தாறுமாறாக புகார் வாசித்தார். கல்யாணிக்கு சப்போர்ட்டாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராகேஷ்-யும் ரவுண்டு கட்டி அடித்தார் ஸ்ரீரெட்டி. "இத இப்படியே விட்டா சரிப்பட்டு வராது' என களத்தில் இறங்கினார் கல்யாணி. ""பவன் கல்யாண் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு சென்னைக்குப்போய் ஸ்ரீரெட்டியை சூறையாடவேண்டும். அவ(ரி)ளின் காண்ட்காட் நம்பர் இதுதான், யார் வேண்டுமானாலும் கூப்பிடலாம்'' என ஃபேஸ்புக்கில் நாறடித்தார் கல்யாணி.

Advertisment

ss

இது போதாதா ஸ்ரீரெட்டிக்கு? "விட்டேனா பார் அவளை!' என்ற வெறியுடன் கடந்த 25-ஆம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புது வக்கீல்கள் இருவருடனும், ஜிம்பாய்ஸ்களுடனும் வந்தார். ""சார் பாருங்க சார் இந்த ஆபாசத்தை! நான் ஆந்திர சி.எம். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளுங்கிறதால, பவன் கல்யாண் இப்படி யெல்லாம் தூண்டிவிடுறார்.

அந்த கல்யாணியையும் ராகேஷையும் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்'' என புகார் மனு கொடுத்துவிட்டு, மீடியாக்களிடம் சரமாரியாகப் பொளந்து கட்டினார்.

"ஸ்ரீரெட்டிய இப்படியே விட்டோம்னா சரிப்பட்டு வராது' என்ற முடிவுடன் களம் இறங்கியுள்ளார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். நம்ம தமிழ்நாட்டில் பொறுப்பான இடத்துல இருந்து ரெய்டெல்லாம் எதிர்கொண்டவர் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. பொறுப்பிலிருந்து ரிட்டயர்டானதும் பவன் கல்யாண் நடத்தும் ஜனசேனா கட்சிக்கு ஆலோசகரானார். சமீபத்தில்கூட மதுரையில் அவரது சமூகத்து ஆட்களைத் திரட்டி கூட்டம் போட்டார்.

அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் இப்போது "பவன் கல்யாணுக்கு எதிராக இனிமேல் ஸ்ரீரெட்டி வாயே திறக்கக் கூடாது' என்பதற்காக ஆந்திராவிலிருந்து அடிதடி ஆட்களை இறக்குமதி செய்துள்ளாராம். முதலில் ஸ்ரீரெட்டியை மிரட்டுவது, கேட்கலைன்னா தட்டுவது என்ற அசைன்மெண்டை அடிதடி ஆட்களுக்கு கொடுத்துள்ளாராம் அந்த ஐ.ஏ.எஸ். ஆபீசர்.

-வீரபாகு

cini100320
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe