Advertisment

பிக்பாஸ்' வீட்டுக்குள் மோசம் போனேன்!-சாக்ஷி ஷாக்!

/idhalgal/cinikkuttu/i-went-bad-biggboss-house-shakshi-shock

"பிக்பாஸ்' வீட்டுக் குள்ளிருந்து வெளியே வருகிறவர்கள் அனைவருமே கசப்பான அனுபவங் களைச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. முதல் இரண்டு "பிக்பாஸ்' நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் மறுத்தவர்கள், மூன்றாவது நிகழ்ச்சிக்குப் போய் மாட்டிக்கொண்டதாகப் புலம்புகிறார்கள்.

Advertisment

நடிகை வனிதா, மதுமிதா ஆகியோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியதாகக் கூறினார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறியுள்ள சாக்‌ஷி அகர்வால் "பிக்பாஸ்' வீட்டுக்குள், தான் ஏமாற்றப் ப

"பிக்பாஸ்' வீட்டுக் குள்ளிருந்து வெளியே வருகிறவர்கள் அனைவருமே கசப்பான அனுபவங் களைச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. முதல் இரண்டு "பிக்பாஸ்' நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் மறுத்தவர்கள், மூன்றாவது நிகழ்ச்சிக்குப் போய் மாட்டிக்கொண்டதாகப் புலம்புகிறார்கள்.

Advertisment

நடிகை வனிதா, மதுமிதா ஆகியோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியதாகக் கூறினார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறியுள்ள சாக்‌ஷி அகர்வால் "பிக்பாஸ்' வீட்டுக்குள், தான் ஏமாற்றப் பட்டதாகக் கூறியிருக்கிறார்.

Advertisment

ss

""தொடக்கத்தில் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தேன். முன்னே பின்னே தெரியாத அபிராமி, ஷெரின் ஆகியோருடன் நட்பானேன்.

அப்படித்தான் நடிகர் கவினுடனும் சகஜமாகப் பழகினேன். அவர் என்மீது அக்கறை எடுத்து, எனக்கு உதவியாக இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களானோம்.

"பிக்பாஸ்' நிகழ்ச்சியின் முதல் இரண்டு ஷோவுக்கும் என்னை அழைத் தார்கள்.

அப்போது நான் மறுத்துவிட்டேன்! அந்த நிகழ்ச்சி என்னை எப்படிக் காட்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னை நல்லவளாகக் காட்டுவார்களா? எதிர்மறையாகக் காட்டுவார்களா என்று புரியாமல் இருந்தேன். சினிமாவில் நமக்கு கொடுக்கும் கேரக்டரை செய்துவிடுவோம். "பிக்பாஸி'-ல் நாம் நமது ஒரிஜினல் தன்மையோடு இருக்கமுடியும் என்று நினைத்ததால் ஒப்புக்கொண்டேன்.

"பிக்பாஸ்' வீட்டுக்குள் நானும் கவினும் நண்பர்களாக உலா வந்தோம். நிறைய பேசினோம். எவ்வளவு விஷயத்தை காட்டி னார்கள் என்பது தெரியவில்லை! இந்நிலையில்தான் என்னைத் தவிர, இன்னொரு பெண்ணுடனும் கவின் நெருக்கமானார்.

அப்போதுதான் நான் மோசம் போனதை உணர்ந்தேன்.

ss

அது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. "பிக்பாஸ்' நிகழ்ச்சி முடிந்து வெளியே போகும்போது, "நாம் தம்பதியாகத்தான் போவோம்' என்கிற அளவுக்கு கவின் பேசினார். ஆனால், அவருடைய நடவடிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.

"உன்னையும் பிடிக்கும், அவளையும் பிடிக்கும்' என்று கவின் கூறியதை என்னால் ஏற்கமுடியவில்லை. "பிக்பாஸ்' வீட்டைவிட்டு எப்போ வெளியே போவோம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்னரே என்னைத் தயாராக்கிக் கொண்டேன்.

"பிக்பாஸ்' வீட்டுக்குள் ஷெரின்தான் தேவதை! அதுபோல முகேனும் நேர்மையானவர். இருவருக்கும் நான் வாழ்த்துச் சொல்வேன்.

நான் வெளியேற்றப் பட்டாலும், "பிக்பாஸ்' எனக்கு பல வாய்ப்பு கள் கிடைக்க அடித் தளம் போட்டுக் கொடுத் திருக்கிறது. நான் நிறையபேருக்கும் அறிமுகமாகி இருக்கிறேன் என்பதுதான் எனக்கு கிடைத்த சந்தோஷம்'' என்கிறார் சாக்‌ஷி அகர்வால்.

cini100919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe