Advertisment

நான் டமிலில் நடிக்குது

/idhalgal/cinikkuttu/i-was-acting-damiel

மெரிக்காவிலேயே வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார் நெப்போலியன். உடல் நலிவுற்றிருக்கும் தனது மகனை 24 மணி நேரமும் கூடவே இருந்து கவனிக்கவேண்டியிருப்பதால், தமிழ் சினிமா வாய்ப்புகளை பெரும்பாலும் தவிர்த்துவிடும் நெப்போலியன், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் விடுவதேயில்லை. "சீமராஜா'-வில் சிவகார்த்திகே

மெரிக்காவிலேயே வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார் நெப்போலியன். உடல் நலிவுற்றிருக்கும் தனது மகனை 24 மணி நேரமும் கூடவே இருந்து கவனிக்கவேண்டியிருப்பதால், தமிழ் சினிமா வாய்ப்புகளை பெரும்பாலும் தவிர்த்துவிடும் நெப்போலியன், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் விடுவதேயில்லை. "சீமராஜா'-வில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்த நெப்ஸ், இப்போது பாக்யராஜ் கண்ணன் டைரக்ஷனில் கார்த்தி நடிக்கும் படத்தில் வெயிட்டான ரோலில் நடித்து முடித்திருக்கிறார்.

Advertisment

அமெரிக்காவிலேயே இருப்பதாலோ என்னவோ ஹாலிவுட் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Advertisment

nn

திருச்சியைச் சேர்ந்த தமிழரான டெல்லி கணேசன் என்பவர் 30 வருடங்களுக்குமுன்பே அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அவர் தயாரித்த முதல் ஹாலிவுட் படமான "டேர் டெவில்ஸ்' படத்தில் நடித்தார் நெப்போலியன்.

இப்போது கணேசனின் இரண்டாவது தயாரிப்பான "கிறிஸ்துமஸ் கூப்பன்' படத்திலும் நடித்துவருகிறார்.

தமிழகத்தில் இப்படத்தின் புரமோஷனுக்காக கடந்த வாரம் சென்னை வந்தார் நெப்போலியன்.

நெப்போலியனுடன் "கிறிஸ்துமஸ் கூப்பன்' படத்தின் ஹாலிவுட் ஹீரோயின் ஷீனா மான்னிங்கும் வந்திருந்தார். வாழ்க்கையில்தான் நினைத்த தெல்லாம் நடப்பதாக பெருமை யுடன் பேசினார் நெப்போலியன். ""இந்த ஹீரோயின் ஷீனா தமிழ்ப்படத்தில் நடிக்கும் முடிவோடுதான் இங்கே வந்திருக்கார். நம்ம ஊர்மக்களின் அன்பும் பாசமும் அவருக்குப் பிடிச்சிருச்சாம். விரைவில் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கப் போறார்'' என்றார்.

"வண்க்கம் சென்னை' எனப் பேசி அதிர வைத்தார் ஷீனா மான்னிங். இது போதாதா தமிழ்ப்படத்தில் நடிப்பதற்கு. வாம்மா... ஹாலிவுட் மின்னல்.

-ஈ.பா. பரமேஷ்

ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுந்தர்

cine160719
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe