Advertisment

அதற்குள் இறங்கிட்டேன் -பிரியாமணி!

/idhalgal/cinikkuttu/i-got-it-priyamani

ற்போது முன்னணி நடிகை களைவிட, ரிடையர்டு நடிகைகள்தான் வெப் சீரிஸில் வெறிகொண்டு நடிக்கிறார்கள். மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, "திஃபேமிலிமேன்' வெப்சீரிஸ் பிரியாமணியும் களத்தில் குதித்துவிட்டார்.

Advertisment

வெப் சீரிஸ் அனுபவம் குறித்து பிரியாமணி என்ன சொல்றாருன்னா...

""ஒரு வலைத் தொடரில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, நான் உணர்ந்த முதல் மற்றும் முக்கிய விஷயம், எந்த இரண்டாவது எண்ணங்களும் இல்லாமல் அதற்காகச்

ற்போது முன்னணி நடிகை களைவிட, ரிடையர்டு நடிகைகள்தான் வெப் சீரிஸில் வெறிகொண்டு நடிக்கிறார்கள். மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, "திஃபேமிலிமேன்' வெப்சீரிஸ் பிரியாமணியும் களத்தில் குதித்துவிட்டார்.

Advertisment

வெப் சீரிஸ் அனுபவம் குறித்து பிரியாமணி என்ன சொல்றாருன்னா...

""ஒரு வலைத் தொடரில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, நான் உணர்ந்த முதல் மற்றும் முக்கிய விஷயம், எந்த இரண்டாவது எண்ணங்களும் இல்லாமல் அதற்காகச் செல்லவேண்டும் என்பதுதான். அனைத் துத் துறையிலுள்ள நடிகர்களும் வலைத்தொடரில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக பாலிவுட்டிலுள்ள பல முன்னணி நட்சத்திரங்களும் வலைத்தொடரில் நடிக்கும்போது, நான். ஏன் நடிக்கக்கூடாது? என்னிடம் முதன்முறையாக இயக்குநர் ராஜ் மற்றும் டி.கே. கதை சொல்லும்போதே, நான் சுசித்ரா கதாபாத்திரத்தில் இறங்கிவிட்டேன். என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்ல; "தி ஃபேமிலி மேன்' சீரிஸில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

Advertisment

ppp

என்னுடன் நடிக்கும் மனோஜ் பாஜ்பயி சார், கதையின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தனது குடும்பத்திற்குத் தெரியாமல் உளவுத்துறையில் பணியாற்றும் அவர், தனது நடுத்தரக் குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்து வதற்காகப் பாடுபடுவார். சமகால சமுதாயத்தில் பணிபுரியும் பெண்களை பிரதிபலிக்கும் சுசித்ரா, வேலை குடும்பம் இரண்டிற்கும் சமமான இடத்தைக் கொடுக்க வேண்டுமென்று நினைப்பதோடு, ஸ்ரீகாந்த் தனது வேலையில் முழுமையான கவனம் செலுத்து வதாகவும், குடும்பத்திற்கு முக்கியத் துவம் கொடுக்காததாகவும் அவர் உணர்வது இருவருக்கும் இடையிலான முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும், சந்தோஷமாக இருக்கும் இந்த குடும்பத்திற்கு இரு முனைகளில் இருந்தும் அழுத்தங்கள் வருகின்றன. அதையும் தாண்டி இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக நேசிக்கிறார்கள். இப்படி அழகான குடும்பக் கதையோடு நகரும் இந்த வெப் சீரிஸில் பல திருப்பங்களும் நிறைந் திருக்கின்றன.

திரைப்படப் படப்பிடிப்புக்கும், வெப் சீரிஸ் படப்பிடிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின் றன. இங்கே ஒரு நாளில் ஐந்து முதல் ஆறு காட்சிகளைப் படமாக்கி முடித்துவிடுகிறார்கள். இது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்துடன், "தி ஃபேமிலி மேன் சீசன் 2'-வுக்கான படப் பிடிப்பையும் ஏற்கெனவே தொடங்கி விட்டார்கள்'' என்கிறார் உற்சாகமாக.

அமேசானில் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாகியுள்ளது இந்த வெப் சீரிஸ்.

cini081019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe