"முடிவில்லா புன்னகை' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வேலுபிரபாகரன் பேசும்போது, ""பெண் சுதந்திரம் இன்னும் நம் நாட்டிற்குக் கிடைக்கவில்லை. அதிலும் சினிமாவில் பெண்களை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள். நம்நாட்டில் "யு' சான்றிதழ் வாங்கிய ஒரு படம் அமெரிக்காவில் "ஏ' சான்றிதழ் பெறுகிறது. காதலையும், காமத்தையும் மட்டும் கூறுகிறார்கள்.

Advertisment

k

இயக்குநர் ஷங்கர்கூட இம்மாதிரியான சினிமா இயக்குவது வேதனையாக இருக்கிறது.

"முடிவில்லா புன்னகை' திரைப்படம் பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக நல்ல கருத்துகளைக் கொண்டுள்ளது. இப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்'' என்றார்.

Advertisment

கஸ்தூரி பேசும்போது, ""வேலுபிரபாகரன் எனக்கு அறிவுமிக்க ஆசிரியர். நான் அவருக்கு மக்கு மாணவி. பெரியார் கூறிய கருத்துகள், பெரியரைப் பற்றி நான் அறிந்தது வேலுபிரபாகரனை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பூஜ்ஜியம்தான். அவர் அளவுக்கு கற்பைப் பற்றிப் பேச எனக்குத் தெரியாது'' என்றார்.

"முடிவில்லா புன்னகை' படத்தின் ஹீரோவாக ஆரோக்கியசாமி க்ளமென்ட் நடித்தது மட்டுமல்லாமல் தயாரிப்பு, கதை, இயக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றையும் செய்திருக்கிறார்.

Advertisment

அதுமட்டுமில்லாமல், ஜேக்கப் சாமுவேல் உடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார் மற்றும் பாடலையும் எழுதியிருக் கிறார். இளையகம்பனும் இப்படத்திற்காக பாடல்கள் எழுதியிருக்கிறார்.