Advertisment

நான் ரொம்ப பிஸி'' சொல்றது நந்திதா!

/idhalgal/cinikkuttu/i-am-very-busy

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'அட்டக்கத்தி' படம்மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்திதா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துவருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான "எக்கடக்கி போத்தாவா சின்னவாடா' என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கில் வெற்றிகரமான நடிகை என

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'அட்டக்கத்தி' படம்மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்திதா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துவருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான "எக்கடக்கி போத்தாவா சின்னவாடா' என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கில் வெற்றிகரமான நடிகை என்று பெயர் பெற்றுள்ளார்.

Advertisment

nandhitha

அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார். இதுகுறித்து நந்திதா என்ன சொல்ல வர்றாருன்னா, ""தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான "தில்' ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் "சீனிவாசா கல்யாணம்' என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். குடும்பப் பாங்கான படங்களைத் தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் "தில்' ராஜு வின் இந்தப் படம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீசாகிவிட்டது. இந்தப் படத்தில் பல வீர தீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். "சதுரங்க வேட்டை' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான "டார்லிலிங்- 2' படத்தின் தெலுங்கு ரீமேக்கான "பிரேம கதாசித்திரம்- 2' படத்திலும் நடித்துவருகிறேன். இதற்கான படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. தமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும், 'நர்மதா' என்ற படத்திலும் நடித்துவருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாகவிருக்கிறேன்'' என்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக நடித்துவரும் நந்திதா ரொம்ப பிஸியான நடிகைகள் பட்டியலிலில் இணைந்துள்ளார்.

Advertisment

cine280818
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe