Advertisment

நான் தமிழ்ப் பொண்ணு -ரம்யா பாண்டியன் பெருமிதம்!

/idhalgal/cinikkuttu/i-am-tamil-girl-ramaya-pandian-boast

றிமுக கதாநாயகியாக தான் நடித்த "ஜோக்கர்' படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது "ஆண் தேவதை' படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் "ஆண் தேவதை' குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.

Advertisment

"""ஜோக்கர்' படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய ச

றிமுக கதாநாயகியாக தான் நடித்த "ஜோக்கர்' படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது "ஆண் தேவதை' படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் "ஆண் தேவதை' குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.

Advertisment

"""ஜோக்கர்' படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார்தான், "ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார்.

Advertisment

ramyapandianஅதன்பின் இயக்குநர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாகச் சொல்லவே, இந்தப் படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்.

சொல்லப்போனால் "ஜோக்கர்' படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். காரணம் "ஜோக்கர்' படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை நடிப்பிலும் தோற்றத் திலும் காட்டியுள்ளேன்.

சமுத்திரக்கனி சார் செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார். அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல்தான் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

இயக்குநர் தாமிரா நம்ம ஊரு பொண்ணுங்கிறதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார்.

என்னோட நடிப்பைப் பாராட்டி படப்பிடிப்புத் தளத்திலேயே பணமுடிப்பு பரிசா தந்தாங்க. அதை என்னால மறக்கவே முடியாது. அது மட்டுமல்ல; டப்பிங் பேசினபோதும் அது போல ரெண்டு தடவை பணமுடிப்பு வாங்கினேன்.

சுத்தியிருக்கிறவங்க பாராட்டினாலும்கூட, ஒரு கதையை, என்னோட கேரக்டரை உருவாக்கின இயக்குநர், தான் நினைத்த மாதிரியே வந்துவிட்ட தாகச் சொல்லிலி பரிசு தர்றது எவ்வளவு பெரிய விஷயம்!

மும்பை , மலையாளத் தில் இருந்து ஹீரோயின் கள் வந்தநிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப் பொண்ணுங்களும் சினிமா வுல இறங்கிட்டு வர்றாங்க.

"ஆண் தேவதை' வெளியான பின்னாடி நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவேன்'' என்கிறார் நம்பிக்கையுடன்

cine040918
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe