தமிழ் பாதி, மலையாளம் பாதி கலந்துசெய்த கலவைதான் அதிதி பாலன் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக இருந்தது. "படவேட்டு' என்ற மலையாள படத்தில் நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்த பிறகுதான் அது வெளியே வந்திருக்கிறது.
"அருவி' கதாநாயகியாய் வந்து மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில், இப்போதுதான் அவருக்கு புதிய படம் கிடைத் திருக்கிறது. அவர் பட வாய்ப்புகளைத் தேடி அலையவில்லை என்பதே இதற்கு காரணம். முதிர்ச்சியான கேரக்டர்களை எதிர் பார்த்தே அவர் வந்த சில வாய்ப்புகளைத் தவிர்த்திருக்கிறார்.
"படவேட்டு' மலையாளப

"படவேட்டு' மலையாளப்படத்தின் கதாநாயகி, தன்னைப் போலவே குணம்கொண்ட கேரக்டராக இருந்ததால் அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் அதிதி. அதுதவிர, கொல்கத்தாவை மையமாகக்கொண்ட ஒரு படத்தில் நித்யா மேனனுக்கு பதிலாக இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சரி, இவருக்கும் மலையாளத்திற்கும் என்ன தொடர்பு? ""அது ஒன்றுமில்லை, எனது அப்பா சென்னையைச் சேர்ந்த தமிழர். அம்மா மாவேலிக் கரைக்காரர்'' என்ற அதிதி, தான் மோகன்லால் ரசிகை என்று, நாசூக்காக அவருக்கும் ஐஸ் வைக்கிறார்.
"படவேட்டு' வாய்ப்பு எப்படிக் கிடைத்து மேடம்?
""பாண்டிச்சேரியில் ஆதி சக்தி என்ற நாடகக் குழுவுடன் இருந்தேன். அங்கு டைரக்டர் லிஜு கிருஷ்ணா வந்து என்னைச் சந்தித்தார். அவர் சொன்ன ஸ்கிரிப்ட் எனக்குப் பிடித்திருந்தது. கண்ணூரை மையமாகக் கொண்ட கதைக் களம். டிசம்பரில் ஷூட்டிங் தொடங்குச்சு. ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம் இருக்கும்போதே நான் அங்கு போய்ட்டேன். மலையாளம் தெரியும்னாலும், அந்த பகுதி மக்களுடைய பேச்சு மொழியை அறிவது அவசியம்னு நெனச்சேன்.
ஷூட்டிங் ஸ்பாட் எனக்கு முதல் பட ஷூட்டிங்கையே நினைவுபடுத்தியது. அவ்வளவு பேரும் இளையவர்கள். நான் ஷூட்டிங் இடைவெளியில் கேரவானில் உட்கார மாட்டேன். அந்தப் பகுதி மக்களின் பேச்சு மொழியைக் கற்றுக்கொண்டேன்.
அஜித் நடித்த "என்னை அறிந்தால்' படத்தில் திரிஷாவுடன் நாட்டியப் பள்ளியில் சேர்ந்து நடித்தேன். அது சில விநாடிகளே வரும். நல்ல உயரமான இரண்டு டான்ஸர் கள் வேண்டும் என்று தேடிக்கொண்டி ருந்தார்கள். அப்போது நானும் எனது சித்தி பொண்ணும் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருந்தோம்.அப்படித்தான் அந்தக் காட்சியில் நாங்கள் இருவரும் இடம்பெற்றோம். அந்தச் சமயத்திலெல் லாம் நான் நடிக்க வருவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.
பிறகெப்படி "அருவி' படத்தில் நடித்தேன் என்றுதானே கேட்கிறீர்கள்? நான் படிக்கும்போது பெரும்பாலும் விளையாட்டு மைதானத்தில்தான் இருப்பேன். நான் புட்பால் பிளேயர். எனது பல்கலைக்கழகத்திற்காக ஆடி யிருக்கிறேன். எல்எல்பி முடித்தவுடன் நாடகத்தில் கவனம் செலுத்தலாம் என்று நினைத்தேன். அந்தச் சமயத்தில் எனது ஃப்ரண்ட் "அருவி' குழுவினரின் டெஸ்ட் டுக்காக போனாள். நானும் போனேன்.
நான் நன்றாகச் செய்யவில்லை என்று நினைத்தேன். ஆனால், 400 பேரில் நான் செலக்ட் ஆனேன்'' என்று பெருமையாகச் சொல்கிறார் அதிதி.