நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் "பரியேறும் பெருமாள்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை யில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஹீரோ கதிர், ஹீரோயின் "கயல்' ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ranjit.jpg)
நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ananthi.jpg)
""ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள்தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். "நான் கஷ்டப்பட்டு ஒரு தேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள்' என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம்தான் இந்தப் "பரியேறும் பெருமாள்' படம். எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை உடைக்கிற வேலையைச் செய்வேன். இதனால் சாதிவெறியன் என என்மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.
ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழுத் திருப்தியைக் கொடுத்திருக்கிறது.
யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல. அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத்தான் நான் விரும்பு கிறேன். அந்த வேலையை "பரியேறும் பெருமாள்' நிச்சயமாகச் செய்யும்'' என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.
"பரியேறும் பெருமாள்' செப்டம்பர் 28-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. விழாவிற்கு சேலை கட்டிவந்த ஹீரோயின் "கயல்' ஆனந்தி பார்க்கவே அம்சமாக இருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-09/ananthi-t.jpg)