Advertisment

நானும் சிங்கிள்தான் நயன்- சிவன் திகில் லவ் ஸ்டோரி

/idhalgal/cinikkuttu/i-am-also-single-nyan-shivan-horror-love-story

தேர் இஸ் கம்பெனி' பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், "புன்னகைப் பூ' கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் "நானும் சிங்கிள் தான்.'

Advertisment

இந்தப் படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன

தேர் இஸ் கம்பெனி' பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், "புன்னகைப் பூ' கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் "நானும் சிங்கிள் தான்.'

Advertisment

இந்தப் படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

nayan

ஒளிப்பதிவு- டேவிட் ஆனந்த்ராஜ், இசை- ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள்- கபிலன் வைரமுத்து, ஸ்டன்ட்- கனல் கண்ணன், கலை- ஆண்டனி ஜோசப், எடிட்டிங்- ஆதித்யன், நடனம்- அபீப் உஷேன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோபி.

படம் பற்றி இயக்குநர் கோபி கூறியதாவது...

""சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது.

அதன் அடிப்படையிலே "நானும் சிங்கிள் தான்' என்ற டைட்டிலோடு களம் இறங்கியிருக்கிறோம்.

டைட்டில்போலவே கன்டென்டிலும் தனிக்கவனம் செலுத்தியிருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக் காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையைத் தயார் செய்துள்ளோம். நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி. பலர் ஆசிர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போதுவரை சிலரால் ஆச்சரியமாகப் பார்க்கும் ஜோடியும்கூட.

nayan

இந்தப் படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாராபோல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவேண்டும் என்பதுதான். தமிழ் சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் "பில்லா' படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார்.

அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவதுதான் கதை. இதற்குள் நயன்- விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும்'' என்கிறார் இயக்குநர் கோபி.

ஆக, முரட்டு சிங்கள்ஸ் முதற்கொண்டு எல்லா சிங்கிஸுக்கு இப்படம் செம்ம என்டெர்டெயின் மென்ட்டாக இருக்கும் என்கிறார்கள். படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

cini280120
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe