Advertisment

ஞானவேல்ராஜாவின் "அந்த' வெறி!

/idhalgal/cinikkuttu/hysteria-gnanavel-raja

ப்ப நாப்பத்தஞ்சு, அம்பது வயசுல இருக்குற ஆளுங்க (நம்மளையும் சேர்த்துத்தான் சொல்றோம்) காலேஜ் படிச்சுக்கிட்டிருக்கும்போது, தியேட்டரில் ஓடும் காலைக் காட்சிகள் செம "ஸ்பெஷல்.' "அவளோட ராவுகள்', "அவனோட லீலைகள்', "ராத்திரி நேரத்து பூஜைகள்', "அஞ்சரைக்குள்ள வண்டி', "அதிரூப சுந்தரிகள்'-னு கிளுகிளு மலையாளப் படங்களைப் போட்டு, காலேஜ் பயலுகளைக் கூட்டம் சேர்த்து கல்லா கட்டுவாங்க. இந்தமாதிரி ஏடாகூட படங்களின் கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர், கே. பாலசந்தரின் அறிமுகமான பிரமிளா.

Advertisment

gautam-karthick

yanavelraja

பிரமிளாவின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பார்த்து, ஷர்மிலி, மாதுரின்னு ஏகப்பட்ட ஜில்பான்ஸ்கள் களத்தில் இறங்கி, ஆடைகளை இறக்க ஆரம்பித்ததும் "மழு மாமனாரின் இன்பவெறி'-ங்கிற மாதிரியான படங்கள் வந்து ஏகப்பட்ட இளைஞர்களை வெறி பிடிக்க வைத்தது. அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு செம ஜெயண்ட் ஃபிகர் ஷகிலா வந்து "திறமை'-ய காட்ட ஆரம்பிச்சாரு பாருங்க, மலையாள சூப்பர் ஸ்டா

ப்ப நாப்பத்தஞ்சு, அம்பது வயசுல இருக்குற ஆளுங்க (நம்மளையும் சேர்த்துத்தான் சொல்றோம்) காலேஜ் படிச்சுக்கிட்டிருக்கும்போது, தியேட்டரில் ஓடும் காலைக் காட்சிகள் செம "ஸ்பெஷல்.' "அவளோட ராவுகள்', "அவனோட லீலைகள்', "ராத்திரி நேரத்து பூஜைகள்', "அஞ்சரைக்குள்ள வண்டி', "அதிரூப சுந்தரிகள்'-னு கிளுகிளு மலையாளப் படங்களைப் போட்டு, காலேஜ் பயலுகளைக் கூட்டம் சேர்த்து கல்லா கட்டுவாங்க. இந்தமாதிரி ஏடாகூட படங்களின் கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர், கே. பாலசந்தரின் அறிமுகமான பிரமிளா.

Advertisment

gautam-karthick

yanavelraja

பிரமிளாவின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பார்த்து, ஷர்மிலி, மாதுரின்னு ஏகப்பட்ட ஜில்பான்ஸ்கள் களத்தில் இறங்கி, ஆடைகளை இறக்க ஆரம்பித்ததும் "மழு மாமனாரின் இன்பவெறி'-ங்கிற மாதிரியான படங்கள் வந்து ஏகப்பட்ட இளைஞர்களை வெறி பிடிக்க வைத்தது. அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு செம ஜெயண்ட் ஃபிகர் ஷகிலா வந்து "திறமை'-ய காட்ட ஆரம்பிச்சாரு பாருங்க, மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களே மண்ணைக் கவ்வ ஆரம்பிச்சுருச்சு. ஷகிலா காட்ல பண மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு. இங்க சென்னை வடபழனியில் ராம் தியேட்டர்னு ஒண்ணு இருந்துச்சு. எல்லாரும் பார்க்குற மாதிரியான, செகண்ட் ரிலீஸ் படங்களாப் போட்டு, நல்லாத்தான் போய்க்கிட்டிருந் துச்சு. என்ன நினைச்சாய்ங்களோ, எவன் சொன் னானோ, குபீர்னு கிளுகிளு படங்களா ஓட்ட ஆரம்பிச்சாய்ங்க.

Advertisment

ராத்திரி 11 மணி ஷோன்னா, ராம் தியேட்டர்ல ரொம்ப ஃபேமஸ். 11 மணிக்கு படம் ஸ்டார்ட் ஆகும். 11.20-க்கு இன்டெர்வெல். ""என்ன மச்சி இடைவேள விட்டுட்டான், ஒண்னையும் காணோம்'' என முணுமுணுத்தபடியே தம் அடிப்பார்கள் ரசிக மகாஜனங்கள்.

maduri

இன்டெர்வெல் முடிஞ்சு உள்ளே போயி ரெண்டு நிமிஷத்துல "சிக்னல் லைட்' போடுவாய்ங்க, அதுக்கடுத்து அந்த சீனைப் போடுவாய்ங்க, திடீர்னு வணக்கம் போட்டு எல்லா லைட்டை யும் போட்ருவாய்ங்க. மொத்தத்துல அரை மணி நேரத்துல ஷோவே முடிஞ்சு போயிரும். ஷகிலா படமா போட்டு காசை அள்ளிய ராம் தியேட்டர் இப்ப கல்யாண மண்டபமா ஆகிருச்சு.

ஒருகட்டத்துல இனிமே யாரும் ஷகிலாவை வச்சு படம் (அவய்ங்க எங்க படம் எடுத்தாய்ங்க, படம்தான காட்டுனாய்ங்க) எடுக்கக் கூடாதுன்னு மலையாளத் தயாரிப்பாளர்கள் சங்கத்துல தீர்மானம் போடும் அளவுக்கு ஆகிப்போச்சு. அடச்சே, ஞானவேல் ராஜாவைப் பத்தி எழுத ஆரம்பிச்சு, கண்ட கருமாந்திரத்தையும் எழுதிக்கிட்டிருக்கோமே, மேட்டருக்கு வருவோம்.

அப்ப "மாமனாரின் இன்பவெறி' மாதிரியான படங்கள் வந்துச்சு. இப்ப நல்ல தயாரிப்பாளர்னு பேர் எடுத்த ஞானவேல் ராஜாவுக்கு செக்ஸ் பட வசூல் வெறி வந்துருச்சு. கவுதம் கார்த்திக், நிக்கிகல்ராணி நடிச்ச(!!??) "ஹரஹர மஹாதேவகி'-ங்கிற படத்தை வாங்கி வெளியிட்ட ஞானவேல் ராஜா வுக்கு கொழுத்த லாபம். அந்தக் கொழுப்புலதான் "இருட்டு அறையில் முரட்டுக் குத்து'-வை ஆரம்பிச்சாரு. இ.அ.மு.கு.வின் விளம்பரத்தைப் பார்த்தே பல தயாரிப்பாளர்கள், ஞானவேல் ராஜாவின் உறவினர்களான நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முகம் சுளித்தனர். இந்த விவகாரத்தை 2017 அக்.24 தேதியிட்ட "சினிக்கூத்து' இதழிலேயே, "ஜலபுல ஜங் தயாரிப்பாளரின் ஆ ரக சமாச்சாரங்கள்' என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியாக எழுதியிருந்தோம்.shakila

இப்போது இ.அ.மு. குத்துவிற்கு சகல திசைகளிலிலிருந்தும் எதிர்ப்பு கடுமையாக வந்துகொண்டிருக்கிறது. டைரக்டர் பாரதிராஜா ஓப்பனாகவே ஸ்டேட்மென்ட் விட்டு கடுமை யாகச் சாடியிருக்கிறார். அதேபோல் தயாரிப்பாளர் ஜே.எஸ். சதீஷ்குமார், பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் ஆகியோரும் ஞானவேல் ராஜாவை நேரடியாகவே தாக்கியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்த நடிகரே, ""ஏண்டா இந்தப் படத்துல கமிட் ஆனோம்னு ஆகிப்போச்சு.

அவ்வளவு அருவெறுப்பு, ஆபாசம். பாதியில விலகுனா பஞ்சாயத்துக் கூட்டிருவாய்ங்கன்னு பயந்துதான் கன்டினியூ பண்ணினேன். சத்தியமா இந்தப் படத்தை குடும்பத்தோட பார்க்கமுடியாது. ஆனா ஞானவேல் ராஜா, அவரின் குடும்பத்துடன் பார்க்கும் தைரியம் உள்ளவர்'' என புலம்பித்தள்ளிவிட்டார் ஆனாலும் ஞானவேல் ராஜா அசருவது மாதிரி தெரியவில்லை. ஏன்னா இதே இ.அ.மு.கு.வின் டைரக்டரை வச்சு, "பல்லு படாம பார்த்து செய்யுங்க'-ன்னு அடுத்த படத்தை ஆரம்பிக்கப் போறார்னா பாத்துக்கங்களேன்.

--------------

பிட்ஸ்...

றைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ஒய்.எஸ். ஆராக மம்முட்டி நடிக்க, மகி வி. ராகவ் டைரக்ட் பண்ணுகிறார்.

இப்படத்தில் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க நம்ம சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

ஊர்வசியின் அக்கா கல்பனாவின் கடைசிப்படம் நாகார்ஜூன்- கார்த்தி நடித்த "தோழா.' இப்போது கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யாவும் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். "குஞ்சியம் மாளும் அஞ்சமக்காளும்' என்ற அந்தப் படத்தில் இர்ஷத், கலாபவன் ஷாசான், ஷாஜி, பினு ஆகியோரும் நடிக்க, சுமேஷ் லால் டைரக்ட் பண்ணுகிறார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe