"காலா' படத்தில் எனக்கு கிடைத்திருக்கிற கேரக்டர் மாதிரி எல்லாருக்கும் எப்பவும் கிடைத்துவிடாது. "காலா' பட ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே தெலுங்கில் இரண்டு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதை நான் ஏற்கவில்லை.

Advertisment

huma qureshi

தாராவியிலும் சென்னை புறநகரிலும் காலா ஷூட்டிங் நடந்தபோது ரஜினி செட்டுக்கு வரும்போது ரசிகர்கள் காட்டிய உற்சாகத்தை என்னால் மறக்க முடியாது. தமிழே தெரியாத நான் ஆங்கிலத்தில் வசனங்களை எழுதி வைத்து பேசினேன். உச்சரிப்பை உதவியாளர்கள் சொல்லித் திருத்துவார்கள். செட்டில் அடுத்தவர்கள் நடிக்கும்போது பேசுகிற பாவனைகளை கவனித்து உள்வாங்குவேன்.

மிகப்பெரிய மாஸ் படமான "காலா'வில் நடிகைக்கு இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?

ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் செட்டில் மிக எளிமையாக இருப்பார். அவருடன் நடிக்கும்போது எவ்வித பதற்றமும் அடையவில்லை. "காலா' படம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை நான் நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறேன்'' என்று வார்த்தைக்கு வார்த்தை "காலா' பெருமை பேசுகிறார் ஹியூமா குரேஷி.

அடுத்து வருகிற வாய்ப்புகளை மேடம் எப்படிப் பயன்படுத்துறாங்கனு பாக்கலாம்.