தயாரிப்பிலும், விநியோகத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்து வலம்வரும் கிரியேட்டில் எண்டெர் டெய்னர்ஸ் நிறுவனர் ஜி. தனஞ்செயன். சுரேஷ் ரவி- ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் "காவல் துறை உங்கள் நண்பன்' படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.
இதுபற்றி ஜி. தனஞ்செயன் கூறியதாவது...
""நாங்கள் தரமான கதைகள் கொண்ட படங்களையே தயாரிப்பதையும், விநியோகிப்பதையும் முதல் நோக்கமாகக் கொண்டு இயங்கிவருகிறோம். இந்த நோக்கம் 2020-ஆம் வருடத்தில் பல நல்ல தரமான படங்களை விநியோ கிக்கும் பயணத்தில் எங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இப்பயணத்தில் "காவல் துறை உங்கள் நண்பன்' படம் ஒரு அற்புத மான தேர்வாக எங்கள் முன்னால் வந்தது. இப்படத்தைப் பார்த்தபோது தயாரிப்பு மற்றும் விநியோ கத்தில் எங்கள் நிறுவனத்திற்குப் பெருமை சேர்க்கும் படைப் பாக இப்படம் விளங்கும் என்று தோன்றியது. மிக வலுவான கதையும், திரைக் கதையும் கொண்ட இப்படம் இயக்குநர் ஆர்டிஎம். இயக் கத்தில் எதார்த்த மான பாணியில் வெகு அற்புதமா கஉருவாக்கப் பட்டுள்ளது. இத்திரைப்படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிட, திரையரங்கு எண்ணிக்கை உட்பட விநியோகத் திட்டங்களை வகுத்துவருகிறோம்.''
பி. பாஸ்கரன், பி. ராஜ பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி "பி.ஆர். டாக்கீஸ் கார்ப்பரேஷன்' சார்பில் "ஒயிட் மூன் டாக்கீஸ்' நிறுவனத் துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்கள்.