""நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ்ச் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது'' என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், "ஆந்திரா மெஸ்' பட இயக்குநர் ஜெய்.

Advertisment

tensiondirector

நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத் தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.

ஷோ போட் ஸ்டுடியோஸ் சார்பில் நிர்மல் கே. பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', "ரிச்சி' போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Advertisment

tensiondirectorஇந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜெய், ""ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம். ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்தமாதிரி எடுத்து முடிக்கிறவரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே. பாலாவிற்கு முதலிலில் என் நன்றிகள். அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள். தமிழ்ச் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின்மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்கவேண்டு மென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்தச் சூழல் நிச்சயம் தமிழ்ச் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது. இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும்தான் பொறுப்பு'' என்று பொங்கித் தீர்த்து விட்டார்.