Advertisment

எப்ப கிளப்புவாரோ, எப்படி கிளப்புவாரோ? -நீது சந்திரா திகில்!

/idhalgal/cinikkuttu/how-does-clerk-nithu-chandra

"தீராத விளையாட்டுப் பிள்ளை'-யில் விஷாலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீது சந்திரா. அதற்கடுத்து அமீர் டைரக்ஷனில் ஜெயம்ரவியுடன் ஜோடி போட்ட "ஆதிபகவன்' ஊத்திக் கொண்டதால் அப்செட்டான நீது சந்திராவுக்கு அதன்பின் தமிழ் சினிமாவில் வாய்ப்ப

"தீராத விளையாட்டுப் பிள்ளை'-யில் விஷாலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீது சந்திரா. அதற்கடுத்து அமீர் டைரக்ஷனில் ஜெயம்ரவியுடன் ஜோடி போட்ட "ஆதிபகவன்' ஊத்திக் கொண்டதால் அப்செட்டான நீது சந்திராவுக்கு அதன்பின் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். அங்கேயும் சான்ஸ் இல்லாததால், இந்திப் பக்கம் போனார். ஏதோ ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியவர், இப்போது ப்ரோ கபடி லீக் தொடரில் பாட்னா பைரேட்ஸ் அணியின் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

nithuchandra

சிறுவயதிலேயே "டேக் வான் டூ' என்னும் சண்டைக்கலையில் சாம்பியனான நீது, பேஸ்கட் பால் விளையாட்டு அம்பாஸிடராகவும் சில காலம் இருந்தார். ""நான் பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து வந்தவள் என்பதால், சொந்த ஊர் அணியின் அம்பாஸிடராக இருப்பதில் டபுள் மடங்கு ஹேப்பி. விளையாட்டு என்றாலே எனக்கு கொள்ளைப் பிரியம் என்பதால், இப்போது தேஜா வூ மனநிலையில் இருக்கிறேன். தேஜா வூ அப்படின்னா என்ன அர்த்தம்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்'' என்கிறார் நீது சந்திரா நடிகைகள் எல்லாரும் பத்து, பதினைந்து வருடங் களுக்கு முன்பு நடந்த படுக்கைக்கு கூப்பிட்ட சமாச்சாரத்தை மீ டூ மூலம் கிளப்பி ராவடி பண்ணிக் கொண்டிருக்கும்போது, ஸ்போர்ட்ஸிலும் மீ டூ வில்லங்கத்தை நீது சந்திரா எப்ப கிளப்புவாரா, எப்படி கிளப்புவாரோ? என திகில் பரவிக்கொண்டிருக்கிறது.

Advertisment

-பரமு

cine041218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe