பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "ஞானச் செருக்கு'. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி, ஓவியர் வீர சந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், வ. கௌதமன், பன்னீர்செல்வம், சுப்பிரமணிய சிவா, அஜயன்பாலா, நடிகைகள் மதுமிதா, வசுந்தரா, கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

ett

தொல். திருமாவளவன் பேசும் போது, ""இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். "ஞானச்செருக்கு' என்கிற பெயரை இன்னும் சாதாரண தமிழில் சொன்னால் அறிவுத்திமிர் என்று சொல்லலாம். கதையின் கருப்பொருளே ஓவியர் வீர சந்தானம் தான். ஓவியர் வீர சந்தானத் துடன் போராட்டக்களங் களில் நான் கைகோர்த்து நின்றவன். என்னுடைய புத்தகங் களுக்கு அவரது ஓவியங்களை வழங்கி அலங்கரித்திருக்கிறார்.

மிகச்சிறந்த ஈழ உணர்வாளர். தரணி ராஜேந்திரன் யாரும் உணரமுடியாததை உணர்ந்திருக்கிறார்.

Advertisment

யாரும் தொடமுடியாத ஒரு விஷயத்தைத் தொட்டிருக்கிறார். யாரும் விவரிக்க முடியாத ஒரு விஷயத்தை விவரித்திருக்கிறார். இதுவே அவருக்கு உள்ள ஞான வலிமையைக் காட்டுகிறது.

சில படங்களைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை, இதெல்லாம் எப்படி ஓடுகிறது?' என கேள்வி எழும். ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்தபோது அவரது படத்தைப் பார்த்தவர்கள் "ஆள் பார்க்கவே கலராகவும் இல்லை, எம்ஜிஆர் மாதிரி பளபளப்பாகவும் இல்லை. ஆனால் படம் எப்படி ஓடுகிறது?' என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் இதையெல்லாம் மாற்றி னார்கள்'' என்றார்.

rr

Advertisment

நடிகை கோமல் சர்மா பேசும்போது, ""மறைந்த இயக்குநர் மணிவண்ணன் கடைசிப் படமாக இயக்கிய "அமைதிப்படை-2'-வில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த அவரை பார்க்கச் சென்றபோது... அந்த நிலையிலும்கூட படத்தின் எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்படி ஒரு கலைஞரிடம் சினிமா கற்றுக்கொண்ட நான், வீர சந்தானம் நடித்த இந்தப் படத்தின் டிரெய்லர் காட்சிகளைப் பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். இந்த உலகிற்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான். தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்'' என அழகு தமிழில் பாராட்டுகளை வெளிப்படுத்தினார் நடிகை வசுந்தரா பேசும்போது, ""இந்தப் படத்தை எடுப்பதற்கு இயக்குநர் தரணி ராஜேந்திரன் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதைக் கேள்விப்பட்டேன். வீர சந்தானம் போன்ற ஒரு மகா கலைஞனைப் பெருமைப்படுத்தும்விதமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் நிகழ்வில் கலந்துகொண்டது எனக்குப் பெருமை'' என்றார் புளகாங்கிதத்துடன்.

நடிகை மதுமிதா பேசும்போது, ""வீர சந்தானம் ஐயாவை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில் லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நல்ல படங்களை மக்களிடம் எளிதாகக் கொண்டுசேர்க்க முடிய வில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் அடுத்து படம் எடுக்கும் அளவிற்கு லாபம் சம்பாதிக்க முடியவில்லை. தமிழக அரசும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இதற்கு ஏதாவது செய்யவேண்டும்'' என கோரிக்கை வைத்தார் படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசும்போது, """ஞானச்செருக்கு' படம்மூலமாக ஓவியர் வீர சந்தானம் மீண்டும் பிறந்தது போன்ற உணர்வை நீங்கள் உணரலாம். இந்தப் படம் வெளியான பின்பு வீர சந்தானம் யாரென எல்லாரா லும் தேடப்படுவார்'' என்றார்.