theater

Advertisment

ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் இராஜேந்திர எம். இராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு "நாகேஷ் திரையரங்கம்.' ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட "அகடம்' திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது.

aari

"நெடுஞ்சாலை', "மாயா' படப்புகழ் ஆரி கதாநாயக னாக நடிக்கும் இந்தப் படத்தில் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', "இனிமே இப்படிதான்' படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் நிஷா நடித்துள்ளனர். சிறிய இடைவெளிக் குப்பின் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில், தேவராஜ் படத் தொகுப்பில் உருவாகியுள்ளது "நாகேஷ் திரையரங்கம்.'

தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய்ப் படங்களும் வந்திருந்தாலும் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குநர் இசாக். திரையரங்கில் "பேய்' என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட் டுள்ள இந்தப் படம் திகில் படப் பிரியர்களை மட்டுமின்றி- அனைத்துத் தரப்பினரையும் கவரும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.