Advertisment

கொம்பு' தந்த தெம்பு!

/idhalgal/cinikkuttu/horny

"லொள்ளு சபா' ஜீவா கதைநாயகனாக நடிக்கும் "கொம்பு' படத்தை இயக்கியிருக்கும் இப்ராஹிம், பட ரிலீஸுக்கு முன்பே அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அவரது அடுத்த படத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பிரபல ஹீரோ நடிக்க விரைவில் துவங்கவுள்ளது.

Advertisment

ஒரு மாலைப்பொழுதில் "கொம்பு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மிகப் பரப்ரப்பாக இரு

"லொள்ளு சபா' ஜீவா கதைநாயகனாக நடிக்கும் "கொம்பு' படத்தை இயக்கியிருக்கும் இப்ராஹிம், பட ரிலீஸுக்கு முன்பே அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அவரது அடுத்த படத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பிரபல ஹீரோ நடிக்க விரைவில் துவங்கவுள்ளது.

Advertisment

ஒரு மாலைப்பொழுதில் "கொம்பு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மிகப் பரப்ரப்பாக இருந்த வரிடம் உரையாடியபோது...

spot""நான் பிறந்த ஊர் மதுரை. என் குடும்பம் அங்கேதான் இருக்கிறது. நான் படித்ததெல்லாம் தூத்துக்குடி. படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவின் மேல் பெரும் ஆர்வம் இருந்தது.

பள்ளிக்காலங்களில் சீமான், சந்தனராஜ் இரண்டு நண்பர்கள் மூலமாக நடிப்பதற்கு ஆர்வம் வந்தது. அதனால் சென்னையை நோக்கி வந்தேன்.

Advertisment

இயக்குநர் சந்திரகுமாரிடம் உதவி இயக்குநராக இருந்தேன். அவருக்குப் பின் இயக்குநர் பாலு ஆனந்த் திடம் இயக்குநராக இருந்தேன்.

நான் நேரில் பார்த்த ஒரு சம்வத்தை அடிப்படையாக வைத்து "கொம்பு' கதையை உருவாக்கினேன்.

"லொள்ளு சபா' ஜீவா கதாநாயகனாக, "தமிழ்ப்படம்' ஹீரோயின் திஷா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார்கள், மதுரையில் ஆவிகள் அடங்கிய மாட்டுக் கொம்பை ஆராச்சி செய்ய கதாநாயகி வருகிறார்.

அவருக்கு கதாநாயகன் உதவுகி றார் அதைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை கலகலப்பாக எல்லாரும் ரசிக்கும்படியான ஒரு கமர்சியல் மசாலாவாக சொல்லியிருக்கிறேன். ஹாரர், த்ரில்லர், காமெடி மூன்றும் இணைந்த படம்.

"கொம்பு' படத்தின் தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் என்மீதும், என் கதைமீதும் முழுமையான நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தார். படப் பிடிப்பு முடியும்வரை சம்பளம் பாக்கி எதுவும் இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு முகச்சுப்பும் இல்லாமல், "எது நடந்தாலும் நான் இருக்கிறேன், என்று கூறுவார். இப்படிப்பட்ட தயாரிப்பாளர் கிடைப்பது அரிது.

அது மட்டுமில்லாமல்; படத்தின் ரஷ்- ஐப் பார்த்து எனது அடுத்த படத்தை நீதான் இயக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளார்'' என்கிறார் தெம்புடன்.

cine260219
இதையும் படியுங்கள்
Subscribe