Advertisment

ஹாலிவுட் HOT மேட்டர்ஸ்

/idhalgal/cinikkuttu/hollywood-matters-fire-partys

ஃபயர் பார்ட்டிகள்!

ddafமாடலாக அறிமுகமாகி, திரையுலகில் பிரபலமடைந்தவர் காரா டிலிவைன். தன்பால் ஈர்ப்பாளரான இவர், பிரபல நடிகை ஆஷ்லி பென்லினை உருகி உருகி காதலித்துவருகிறார்.

Advertisment

ஒரு மேடையில் ஆஷ்லியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசும்போது, ""அவங்கதான் என்னோட ஸ்பெஷல் லேடி! என்னை நானே லவ் பண்ண கத்துக் கொடுத்து, உண்மையான காதல்னா கஷ்டமா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்த என்னோட எண்ணத்தை உடைச்சி, அதை அனுபவிக்க வைச்ச பேரழகே... உனக்கு நன்றி!'' என்று மெய் மறந்

ஃபயர் பார்ட்டிகள்!

ddafமாடலாக அறிமுகமாகி, திரையுலகில் பிரபலமடைந்தவர் காரா டிலிவைன். தன்பால் ஈர்ப்பாளரான இவர், பிரபல நடிகை ஆஷ்லி பென்லினை உருகி உருகி காதலித்துவருகிறார்.

Advertisment

ஒரு மேடையில் ஆஷ்லியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசும்போது, ""அவங்கதான் என்னோட ஸ்பெஷல் லேடி! என்னை நானே லவ் பண்ண கத்துக் கொடுத்து, உண்மையான காதல்னா கஷ்டமா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்த என்னோட எண்ணத்தை உடைச்சி, அதை அனுபவிக்க வைச்ச பேரழகே... உனக்கு நன்றி!'' என்று மெய் மறந்து பேசினார்.

Advertisment

அந்தக் கூட்டத்தில் இருந்த ஆஷ்லிதான் "அந்த ஸ்பெஷல் லேடி' என்று பலருக்கும் அப்போது தெரியாது.

இவர்களின் ரிலேஷன்ஷிப் ஊர்முழுக்க வைரல் பேச்சானது. "அது லேசுப்பட்ட காதல் கிடையாது. ரெண்டு பேரும் ஒரு எல்லையை மீறி, ரொம்பவே நெருக்கமான நண்பர்களாகி விட்டாங்க.

அவங்களுக்குள்ள இருக்கிற புரிதல்தான், இன்னும் இன்னும் நெருங்கியே இருக்க வைக்கிது' என்று புகழ்ந்திருக்கிறார் அவர்களின் நண்பர் ஒருவர்.

இந்நிலையில், "மேரி க்ளேர்' என்ற இதழின் அட்டைப்படத்திற்கு, பிறந்த மேனியில் போஸ் கொடுத்து அசத்தியிருக்கும் காரா டிவிலைன், முதன்முதலாக ஆஷ்லி பென்லின் உடனான தன் காதல் குறித்து மனம் திறந்திருக்கிறார். பேட்டி கண்டவரின்முன் ஆஷ்லியின் பெயரை உச்சரிக்கவே அவ்வளவு வெட்கப்பட்டார் என்றால் பாருங்களேன்!

_______________

டேட்டிங் வேஸ்டிங்!

daffஆஸ்கர் விருதுபெற்ற நாயகன் ஜேமி ஃபாக்ஸின் மகள் கோரின் ஃபாக்ஸும், சில்வர் ஸ்டார் ஸ்டல்லோனின் மகள் சிஸ்டைனும் இணைந்து நடிக்கும் சுறா மீன் சம்பந்தப் பட்ட படம் ரிலீஸாக இருக்கி றது. கோரின் ஃபாக்ஸுக்கு இதுதான் முதல் படம்.

போன வருடம், சினிமாத்துறையில் அறிமுகமாகி இருக்காத கோரினிடம், ஹாலிவுட் "லைஃப்' இணைய இதழின் சார்பில் டேட்டிங் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ""இப்போதைக்கு நான் சிங்கிள்தான். ஆனால், ரொம்ப நாளைக்கு அப்படியே இருக்க முடியாதில்லையா? அதுபோக, எனக்கு இந்த டேட்டிங் போவது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது'' என்று சொல்லிவிட்டு கடந்து விட்டார்.

தற்போது படம் ரிலீஸாக இருக்கும் வேளையில், மீண்டும் கோரினை சந்தித்த ஹாலிவுட் "லைஃப்' இதழ், கோரினின் டேட்டிங் பற்றி கேட்டதற்கு, ""இன்னும் அதெல்லாம் முடிவாகவில்லை. ஆனால் ஒரு விஷயம். டேட்டிங் பற்றியெல்லாம் அப்பாகிட்ட ஒருபோதும் ஐடியா கேட்க மாட்டேன். அவரே ஐடியா கொடுத்தாக்கூட கண்டுக்காம போயிடுவேன்'' என்றிருக்கி றார். அதேசமயம், கோரினின் தந்தை ஜேமி ஃபாக்ஸ், தன் மகளுக்கு நடிப்பதில் பல்வேறு நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறாராம். கூடிய விரைவில் ஹாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திர லிஸ்டில் கோரினும் இருப்பாராம்.

-மதி

cini100919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe