எலிசபெத் ஓல்சன்: ரசிகர்கள் ஏக்கம்!

ee

Advertisment

"அவெஞ்சர்' படத்தில் ஸ்கார்லெட் கேரக்டராக நடித்து கவனம் பெற்றவர் எலிசபெத் ஓல்சன்.

"அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்' படத்தில் நடித்துவிட்டு, ""எனக்கு மட்டும் எதற்காக லோ-நெக் காஸ்டியூம் கொடுத்தீர்கள்? மற்றவர் களுக்கு அப்படியில்லை! அதனால், அடுத்த பாகத்தில் கழுத்துவரைக்கும் மூடிக்கொள்வதுமாதிரியான காஸ்டியூமைக் கொடுங்கள்'' என்று கேட்டு வாங்கிக்கொண்ட அடக்க, ஒடுக்கமான நடிகை.

இவரும், பாப் பாடகரும், ராக் ஸ்டாருமான ராபி ஆர்னெட்டும் காதலிப்பதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

Advertisment

அதை உறுதிசெய்யும்விதமாக இருவரும் ஜோடிசேர்ந்து போஸ் கொடுத்து, ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தினர்.

சமீபத்தில் ஷாப்பிங் செய்வதற்காக வெளியில் கிளம்பிய எலிசபெத்தை எதேச்சையாக ஃபோட்டோகிராஃபர்கள் படம்பிடிக்க, அதில் அவரது நிச்சயதார்த்த மோதிரம் பளிச்சென்று பதிவாகிவிட்டது. சதுரவடிவ மரகதமும், அதைச் சுற்றி சூரியன்போல் வைரக்கற்களும் இருக்க, தங்கப் ப்ளேட்டால் ஆன அந்த மோதிரம் உலக ஃபேமஸ் ஆகியிருக்கிறது. எலிசபெத்தின் ரசிகர்களை அந்த மோதிரம் ஏக்கத்தில் ஆழ்த்திவிட்டதாம்.

எலிசபெத் ஹர்லி: லிஸ்ட் பெருசு

ன்றும் இளமையான எலிசபெத் ஹர்லி எப்போதுமே தன் ரசிகர் களுக்கு இன்ஸ்டாகிராம் ட்ரீட்மென்ட் கொடுப்பது வழக்கம். eeஅவர் பிகினி உடையுடன் பதிவிடும் ஃபோட்டோக்களைப் பார்த்து ஜொள்ளுவிடுவது அவரது ரசிகர்களின் வழக்கம்.

Advertisment

இத்தனைக்கும் எலிசபெத் துக்கு வயசு 54. எலிசபெத் சமீபத்தில் தனது டாப்லெஸ் படத்தை வெளியிட்டு அதிரவைத்திருக்கிறார். நீச்சல் குளத்தில் இதற்காகவே ஃபுல் மேக்கப்புடன் இருக்கும் எலிசபெத், தண்ணீருக்குள் படுத்தபடி மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்திருக்கிறார். கீழாடை இருந்தும் எந்தப் பயனும் இருக்கவில்லை?!

""இத்தனை வயசாச்சு, அழகை மெயின்டெய்ன் பண்றீங்களே, ஏன் இன்னும் சிங்கிளாவே இருக்கீங்க?'' என்று அவரிடம் கேட்கப் பட்டபோது, வெட்கப்பட்டு சிரித்துவிட்டு, ""எனக்கு ரொம்பவும் ஸ்பெஷலாகப் படுகிற நபர் யாராக இருந்தாலும் அவரோடு டேட்டிங் போகத் தயாராக இருக்கிறேன்'' என்று பட்டென்று சொல்லிவிட்டார்.

அப்படி டேட்டிங் சென்றவர்களில் கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீவ் நாஷ், தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங், நடிகர்கள் மேத்யூ பெரி, டெனிஸ் லேரி, டாம், ஹக் க்ரண்ட் என மிகப்பெரிய லிஸ்டே நீள்கிறது... அது போக, அருண் நாயர் என்கிற கோடீஸ்வர இந்தியரை ஒரேயொரு முறை திருமணமும் செய்திருக்கிறார் எலிசபெத்.

சல்மா ஹைக்: எதுவுமே இல்லாமல்

த்தீன் அமெரிக்காவிலிருந்து வந்து ஹாலிவுட்டைக் கலக்கியவர் சல்மா ஹைக். "இன் ஸ்டைல்' இதழில் 1998-ஆம் ஆண்டு அதன் அட்டைப்படத்தை அலங்கரித்த முதல் லட்டினா என்றும் அவர் புகழப்படுகிறார்.

அது நடந்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், "இன் ஸ்டைல்' இதழின் 25ஆவது ஆண்டு நிறைவுக்காக, சல்மா ஹைக்கிடம் பேட்டி கண்டனர்.

tt

அதில் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட சல்மா, தனது வயதைப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளிப்படுத்தினார்.

"" "இன் ஸ்டைலி'ன் அட்டைப்படச் செய்தியாக வந்தபோது எனக்கு வயது 29. அப்போதைய ஹாலிவுட் வட்டத்தில் எல்லா நடிகைகளுக்கும் இருப்பதைப்போலவே, எனக்கும் 30 வயதைக் கடப்பதைப் பற்றிய பயம் வலுவாக இருந்தது. அதேசமயம், 20 வயதிலிருந்து தொடர்ந்த என் கவர்ச்சியை, இளமையை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். தற்போது எனக்கு அந்த பயம் இல்லை!

எனது 40 வயதிலும், 50 வயதிலும்கூட நான் அதை எண்ணிக் கவலைப்பட்டதில்லை. என்னாலும் மேலாடை, உள்ளாடை இல்லாமல் நடிக்கமுடியும் என்பதற்கு ஆதார மாக, "இன் ஸ்டைலி'ல் என் படங்கள் வெளியானதே.. இனி என்னால் அப்படி தோற்றமளிக்க முடியுமா?'' என உற்சாகம் பொங்க பதிலளித்திருக் கிறார்.

ஜெனிஃபர் அனிஸ்டன்: கவர்ச்சின்னா எது?

gg

"ஹாலிவுட் சினிமாவின் கவர்ச்சி வெடிகுண்டு' என்று ரசிகர்களால் புகழப்பட்டவர் ஜெனிஃபர் அனிஸ்டன். அவர் நடித்த படங்கள் பலவற்றில், கவர்ச்சி அருவியாய்க் கொட்டியதே இதற்குக் காரணம். ஆனால், தன்னை "கவர்ச்சி வெடிகுண்டு' என்று புகழ்வதை, தான் ஒருபோதும் ரசித்ததில்லை என மனம் திறந்திருக்கிறார் ஜெனிஃபர்.

"இன்-ஸ்டைல்' என்ற இதழின் 25-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஜெனிஃபரிடம் பேட்டி கண்டது அந்த நிறுவனம். அட்டைப்பட கட்டுரையாக வெளிவந்த அந்தப் பேட்டியில் பேசியுள்ள ஜெனிஃபர், ""என்னை ஹாட் ஹீரோயினா கவே உலகம் அடையாளம் கண்டுவிட்டது. ஆனால், நான் ஒருபோதும் என்னை அப்படி ரசித்ததில்லை. மாறாக, க்யூட்டான, கலகலப்பான என்னையே நான் விரும்பி யிருக்கிறேன். அது எனக்கு அரிதாகவே கிடைத்தது. க்யூட்டாக, சுட்டித் தனமாக இருப்பதிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறது.

அதை உணர்ந்ததால் இப்படிச் சொல்கிறேன். ஏனென்றால், சில நாட்களில் நாம் ஹாட்டாக தெரிவோம். சில நாட்களில் அது இல்லாததுபோல் தோன்றும்'' என்று மனதில் இருந்ததை யெல்லாம் கொட்டி விட்டார்.

லேடி காகா: கூட்டத்திலும் பிஸி

yyy

மெரிக்க பாப் பாடகி லேடி காகாவும், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராட்லீ கூப்பரும் காதலிக்கிறார்கள், டேட்டிங்கில் இருக்கிறார்கள் என சகட்டுமேனிக்கு செய்திகள் பரவிய நிலையில், "அதெல்லாம் போங்குப்பா' என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் காகா.

சமீபத்தில் நடந்துமுடிந்த "ஆஸ்கர் விருது' விழாவில் லேடி காகாவும், ப்ராட்லீ கூப்பரும் ஒரு மேடையில் ஜோடிபோட்டு பாட, அப்போதே லேசாக கிசுகிசுக்கத் தொடங்கியது ஹாலிவுட் வட்டாரம்.

அந்தளவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆனதாம்.

அடுத்த சில நாட்களில் தனக்கு நிச்சயம் செய்திருந்த கிறிஸ்டியானோ என்பவரை லேடி கழற்றிவிட, தனது காதலி ஐரினா ஹைக்கை விட்டுப் பிரிந் தார் ப்ராட்லீ. இதற்கும் லேடியின் சேட்டைகள்தான் காரணமென்று சொல்லப்பட்டது. லேடியோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற உணவகமொன்றில், லேடி காகாவும், டேன் ஹார்டன் என்பவரும் ஒன்றாக உணவருந்தினர். கூட்டம் எக்கச்சக்கமாக கூடியிருந்த அந்தவேளையிலும் இருவரும் முத்தம் கொடுப்பதில் பிஸியாக இருந்திருக்கி றார்கள்...

(வரும் இதழில் முடியும்)