ஹாலிவுட் HOT மேட்டர்ஸ்!

/idhalgal/cinikkuttu/hollywood-hot-matters

ம்ம கோலிவுட், பக்கத்து ஸ்டேட் மல்லுவுட், டோலிவுட், சாண்டல்வுட் ஹீரோயின்ஸ் நியூஸா போட்டுக்கிட்டிருக்கோமே... கொஞ்சம் சேஞ்சுக்காக ஹாலிவுட் ஹீரோயின்ஸ்சப் பத்தி ஏதோ நமக்குத் தெரிஞ்சவரைக்கும் கொடுத்திருக்கோம். இந்தவாரம் அஞ்சு ஹீரோயின்ஸ் மேட்டர் இருக்கு. அடுத்தவாரம் இன்னும் அஞ்சு ஹீரோயின்ஸ் பத்தி டீடெய்ல் வரும்...

ஜெனிஃபர் லாரன்ஸ்: சிலுவைச்சுழி

aa

"எக்ஸ்-மேன்' சீரீஸ் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெனிஃபர் லாரன்ஸ். இவர் நடித்த "சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக்,' "செரினா,' "மதர்' ஆகிய படங்கள் விமர்சனரீதியில் ஜெனிஃபருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. ஹாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகைகளின் லிஸ்டில் தனித்த இடத்தையும் ஜெனிஃபர் பெற்றிருக்கார். "மொப் கேர்ள்' என்ற புதிய படமொன்றில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கும் இவர், அந்தப் படத்தைத் தயாரிக்கவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

"புலிட்சர்' விருதுபெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் தெரேசா கார்பெண்டர் எழுதிய உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இந்தப்படம் எடுக்கப்படுகிறது. கேங்க்ஸ்டர்க

ம்ம கோலிவுட், பக்கத்து ஸ்டேட் மல்லுவுட், டோலிவுட், சாண்டல்வுட் ஹீரோயின்ஸ் நியூஸா போட்டுக்கிட்டிருக்கோமே... கொஞ்சம் சேஞ்சுக்காக ஹாலிவுட் ஹீரோயின்ஸ்சப் பத்தி ஏதோ நமக்குத் தெரிஞ்சவரைக்கும் கொடுத்திருக்கோம். இந்தவாரம் அஞ்சு ஹீரோயின்ஸ் மேட்டர் இருக்கு. அடுத்தவாரம் இன்னும் அஞ்சு ஹீரோயின்ஸ் பத்தி டீடெய்ல் வரும்...

ஜெனிஃபர் லாரன்ஸ்: சிலுவைச்சுழி

aa

"எக்ஸ்-மேன்' சீரீஸ் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெனிஃபர் லாரன்ஸ். இவர் நடித்த "சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக்,' "செரினா,' "மதர்' ஆகிய படங்கள் விமர்சனரீதியில் ஜெனிஃபருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. ஹாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகைகளின் லிஸ்டில் தனித்த இடத்தையும் ஜெனிஃபர் பெற்றிருக்கார். "மொப் கேர்ள்' என்ற புதிய படமொன்றில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கும் இவர், அந்தப் படத்தைத் தயாரிக்கவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

"புலிட்சர்' விருதுபெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் தெரேசா கார்பெண்டர் எழுதிய உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இந்தப்படம் எடுக்கப்படுகிறது. கேங்க்ஸ்டர்களுக்கு மத்தியில் வளரும் ஒரு சிறுமி, பருவகாலத்தில் கேங்க்ஸ்டரான் அவளது வாழ்க்கை போன்ற புதிய கோணத்தில் கதைக்களம் இருப்பதால், உடனே ஓ.கே. சொல்லி க்ளிக் செய்துவிட்டாராம் ஜெனிஃபர். தயாரிப்பில் இதுதான் பிள்ளையார்சுழி (அமெரிக்க பாஷையில சொல்லணும்னா சிலுவைச்சுழி!) என்பதால், ரொம்பவே கவனமாக கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாராம் ஜெனி!

பெல்லா தோர்ன்: கவிதாயினி!

aa

நடிகையும், பிரபல மாடலுமான பெல்லா தோர்ன், ஹாலிவுட் கண்ட போல்டான நடிகைகளுள் ஒருவர். சமீபத்தில் பெல்லா தனது செல்போனில் எடுத்துக்கொண்ட அந்தமாதிரி செல்ஃபிக்களை ஹேக் செய்த ஒரு பார்ட்டி, அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுவதாகக்கூறிதொடர்ந்து மிரட்டி இருக்கிறார். இதில் கடுப்பான பெல்லா, ""நீ என்னடா போடுறது?'' என்பதுபோல், தானே அந்தப் படங்களை ட்விட்டரில் பதிவிட்டுஹேக்கரைத் திட்டித்தீர்த்தார்.

தற்போது, தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களின் குறிப்புகளை கவிதைப் புத்தகமாக வெளியிட இருக்கிறாராம். "தி லைஃப் ஆஃப் வான்னபி மோகுல்: மெண்டல் டிஸ்அரே' என்னும் இந்தப் புத்தகத்தில், தனது குழந்தைப் பருவத்திலிருந்து, தான் அனுபவித்த பாலியல் தொந்தரவுகள், தந்தையின் பாசம், கடந்துபோன காதல், இளமைக்கால உல்லாசங்கள் என எல்லாவற்றையும் குறித்து வெளிப்படையாக எழுதி இருக்கிறாராம்.

மார்கட் ராபி: டைரக்டரின் நேசமழை!

aa

"ஹாலிவுட்டின் பிதாமகன்' என அழைக்கப்படுபவர் க்விண்டோன் டரண்டினோ. இவரது ஒன்பதாவது படமான "ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' வெளியாகி இருக்கிறது. லியோனார்டோ டி காப்ரியோ, ப்ராட் பிட் மற்றும் மார்கட் ராபி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படம், ஹாலிவுட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்துப் பேசியிருக்கும் டரண்டினோ, நாயகி மார்கட் ராபிமீது ரொம்பவே நேசமழையைப் பொழிந்திருக்கிறார்.

"இந்தப் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் படித்து முடித்தபோது... கையில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தை எழுதியது மார்கட் ராபிதான்! என்னுடைய மிகப்பெரிய விசிறி என்று குறிப்பிட்டிருந்த ராபி... என்னுடைய படத்தில் நடிக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்தக் கதைக்கு அவரைத் தவிர, சரியான தேர்வு இருக்கமுடியாது என்பதை உணர்ந்தேன். இரண்டாம் தேர்வுக்கு இடமின்றி, ராபியைத் தேர்வுசெய்தேன்'' என்று பேசி இருக்கிறார்.

எம்மா ஸ்டோன்: செக்ஸ் சிம்பல்!

ll

இரண்டு வருடங்களுக்கு முன்பு ரிலீஸாகி, சக்கைப்போடு போட்டது "லா லா லேண்ட்' திரைப்படம். அதில் நாயகியாக நடித்த எம்மா ஸ்டோனின் கதாபாத்திரம் அதிகம் பாராட்டப்பட்டு, அகாடெமி விருதினை அவருக்குப் பெற்றுத்தந்தது! மிகச்சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்த எம்மா, தற்போது டிவி சீரிஸான "தி ஃபேவரிட்'டில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

"லா லா லேண்ட்' படம் பெற்ற பாராட்டுகளுக்குப்பிறகு, அதை இயக்கிய டேமியன் செஷீல், தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். படத்திற்கான திரைக்கதையை அவர் எழுதிமுடித்திருக்கிறார்.

மவுனப் படங்கள் வெளிவந்து, டாக்கீஸ் சினிமாவுக்கு ஹாலிவுட் மாறிய காலத்து சினிமாவைப் படமாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் படத்திலும் எம்மா ஸ்டோனையே நடிக்கவைக்க செஷீல் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

அப்போதைய காலகட்டத்தில் செக்ஸ் சிம்லாகப் போற்றப்பட்ட க்ளாராபோ கதாபாத்திரமாக நடிக்கிறாராம். பிராட் பிட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செலீனா கோமஸ்: ஐ லவ் யூ ஃபேன்ஸ்

ss

அமெரிக்க பாப் பாடகியான செலீனா கோமஸ், 27-ஆவது வயதை எட்டியிருக்கிறார். இந்தமுறை தனது பிறந்த தினத்தை இத்தாலியின் ரோம் நகரில் கொண்டாடுவதற்காக தனது தாத்தா, பாட்டியுடன் கிளம்புவதாக முன்னர் அறிவித்திருந்தார். பிறந்த நாளன்று ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்த நிலையில்... தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளைக்கலர் நைட்டி அணிந்து புன்னகைத்திருக்கும் படம் ஒன்றைப் பதிவிட்டுள்ள செலீனா...

"என்னை வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் நன்றி! இதை சுருக்கமாக எழுதிவிட முடியாது. ஒவ்வொருமுறையும் இந்த அளவற்ற அன்பை விவரிக்க... எழுத நினைக்கும்போதும் கண்ணீர் குளமாகின்றன கண்கள். நேற்றிரவும் அது நடந்தது! உங்கள் எல்லாருக்காகவும் நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். "ஐ லவ் யூ!' என்று பதிவிட்டிருந்தார்.

"அடுத்து ஒரு அழகிய ஆல்பம் வெளியிட இருக்கிறேன். பணிகள் முடிந்துவிட்டன. வெயிட் பண்ணுங்க ஃபேன்ஸ்...'' என்று செல்லக் கட்டளையும் இட்டிருக்கிறார் செலீனா.

(வரும் இதழில் தொடரும்)

cine130819
இதையும் படியுங்கள்
Subscribe