"பரெய்லி கி பர்ஃபி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் பாலிவுட்டை ஒரு ரவுண்டு வர இருக்கிறார் நடிகை கீர்த்தி செனான். தற்போது பல படங்களுக்கான கதைகளைக் கேட்டுவைத்துக் கொண்டிருக்கும் அவர், அஷுதோஸ் கவுரிகர் இயக்கும் "பானிபட்' படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Advertisment

sanjaydutt

தான் நடிக்கும் முதல் வரலாற்றுத் திரைப்படம் இது என்பதால், மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், பானிபட் எனும் இன்னொரு உலகத்திற்கு செல்லும் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கீர்த்தி செனான் தெரிவித்திருக்கிறார். மூன்றாம் பானிபட் யுத்தத்தை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சதாசிவ் ராவ் பஹு வேடத்தில் அர்ஜூன் கபூர், அவரது இரண்டாவது மனைவியான பார்வதி பாயாக கீர்த்தி செனான் மற்றும் அகமது ஷா அப்தலியாக சஞ்சய் தத்தும் நடிக்க உள்ளனர்.