ல்யாணி ப்ரியதர்ஷன் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளார். இதற்கு காரணம் அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் "ஹீரோ' டிச. 20-ஆம் தேதி ரிலீசாகியிருப்பதுதான்.

"ஹீரோ' படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கூறும்போது...

Advertisment

hh

""நான் மீரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மீரா மிகவும் முதிர்ச்சியான மனநிலைகொண்ட பெண். எதையும் பேசவும், செய்யவும் பலமுறை யோசித்து செய்யும் பெண். நிஜவாழ்வில் அதற்கு நேரெதிரானவள் நான். துடுக்குத்தனத் துடன் நினைத்ததை அப்படியே உளறி விடுவேன்.

நான் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படித்தவள். இரண்டு இடங்களிலும் கல்வி சொல்லித்தரப்படும் முறையை அறிந்தவள்.

Advertisment

அந்தவகையில் "ஹீரோ' இன்றைய இந்தியாவின் கல்வி நிலையை அழுத்தமாக அலசும் படைப்பாக, எது சரியானதென்பதை வலியுறுத்தும் படைப்பாக இருக்கும். மேலும் ரசிகர்களை நம் நாட்டின் கல்விநிலை குறித்த நீண்ட சிந்தனைக்கு இப்படம் இட்டுச்செல்லும்.

இயக்குநர் பி.எஸ். மித்ரன், திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பெரும் திறமைக்காரர். ஒவ்வொரு சிறு கதாபாத்திரத்தையும் கச்சிதமாகப் படைத்திருக்கிறார்.

நான் சொல்வதைவிட படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடுவார்கள். சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனங்கொண்ட மனிதர். படப்பிடிப் பிலுள்ள ஒவ்வொரு வரையும் அன்பாகப் பார்த்து கொள்வார். ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல்;

Advertisment

அவரிடம் ஒரு திறமை யான இயக்குநர் மறைந் திருக்கிறார். ஒரு நாள், அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். உணர்வை சில்லிட வைக்கும் யுவன்சங்கர் ராஜாவின் இசை, ஜார்ஜ் ஈ வில்லியம்சின் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு என, இத்தனை சரித்திர நாயகர்கள் ஒன்றிணைந்திருக்கும் படத்தில், நான் நடித்திருப்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. என்மேல் நம்பிக்கை வைத்து, என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு தயாரிப்பாளர் ராஜேஷ் சாருக்கு நன்றி. இப்படத்தின்மீதான அவரது நம்பிக்கை அசாதாரண மானது. படத்தை இத்தனை பிரம்மாண்டமாக உருவாக்கியதாகட்டும், இப்போது மிகப்பெரிய அளவில் வெளியிடுவதா கட்டும் அவருக்கு நிகர் அவரே'' என அனைவரையும் தாராளமாக- ஏராளமாகப் பாராட்டினார்.

-ஈ.பா. பரமேஷ்